kumaran's படம்

யோகா செய்வதற்கு உங்கள் உடலைத் தவிர எந்த உபகரணமும் தேவை இல்லை. யோகாவில்பிரதானமானது மூச்சுப் பயிற்சி. இதில் ரத்த ஓட்டம் சீராகும், மனம் தெளிவடையும், புத்தியில் விழிப்புணர்வு உண்டாகும். மனமும் உடலும் இணைவதுதான் யோகா. மற்ற பயிற்சிகளில் உடல் மிக விரைவாக இளைக்கும். ஆனால், பயிற்சியை நிறுத்தினால் முன்பைவிட அதிக எடை வர வாய்ப்பு உண்டு. யோகாவில் எடைக் குறைவது மெதுவாக நிகழும். ஆனால், ஆறுமாத யோகா பயிற்சியின் பலன் ஒன்றரை வருடம் இருக்கும். இடையில் யோகாவை நிறுத்தினாலும் எடை ஏறாது. இயற்கை நமக்கு 24 மணி நேரம் கொடுக்கிறது. நேரப் பகிர்வு அவசியம். முதல் நாள் இரவே மறுநாளுக்கு தேவையான காய்கறி, உடைகளை தயார் நிலையில் வைத்துவிட்டு விரைவாக படுக்கைக்குச் சென்றால், அதிகாலையில் விழிப்பு வரும். எழுந்ததும் யோகா செய்வது மிக நல்லது. இதனால் உடல், மனம், புத்துணர்வு அடைவதோடு, சுத்தமான காற்றும் கிடைக்கும். 20 நிமிட யோகா, 16 மணி நேரம் புத்துணர்ச்சியுடன் வைக்கும். 11 மணிக்கு வேலைகளை முடித்துவிட்டு யோகா செய்யலாம். ஆனால், 8.30-க்கு காலை உணவை முடித்திருக்க வேண்டும். மாலையும் நல்லது தான். மதியப் பயிற்சி வேண்டாம்

3.66667
Your rating: None Average: 3.7 (3 votes)

கருத்துகள்

vinoth's படம்

மதியம் யோகா செய்வதில் எந்த


மதியம் யோகா செய்வதில் எந்த தடையும் இல்லை..

ஆனால் வயிறு காலியாக இருக்க வேண்டும். அவ்வளவே

உணவு முடிந்து 5 மணிநேரம் கழித்து வயிற்றை காலி செய்து விட்டு யோகா செய்யலாம்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

பொதுவாக எல்லோரும் மதியம் 1-2


பொதுவாக எல்லோரும் மதியம் 1-2 க்குள் மதிய சாப்பாடு சாப்பிடுவார்கள். அந்த கணக்குப்படி பார்த்தால் 5 மணி நேரம் கழித்து மாலை 6 அல்லது 7 மணி ஆகி இருக்கும். அதற்கு பெயர் மாலை நேரம். Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

அதாங்க முன்னமே


அதாங்க முன்னமே சொல்லிவிட்டனே

நேரம் முக்கியமல்ல, வயிற்றில் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் அவ்வளவே...

மதியம் யோகா செய்யநினைப்போர் அந்த நேரம் வயிற்றி்ய் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதும்.
மதியம் யோகா செய்யவேக்கூடாது என எந்த கட்டுப்பாடும் கிடையாது


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

நன்று


நன்று Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

தகவலுக்கு மிக்க நன்றி....


தகவலுக்கு மிக்க நன்றி....


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kumaran's படம்

நன்றி


நன்றி Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


jovialbala's படம்

நல்ல செய்தி.... நண்பா....


4

நல்ல செய்தி.... நண்பா.... Clap

kumaran's படம்

நன்றி நண்பா.


நன்றி நண்பா. Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


VISWAM's படம்

(No subject)


3

Clap

kumaran's படம்

(No subject)


Smile bye


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.