aro...'s படம்

"பாடை"


பாடை

ஒரு பள்ளி கூடம்;

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நாளும்
சுள்ளிதோட்டம் சுமந்து செல்லும்
சமத்துவ சுமைதாங்கி;

நாறிய கட்டை நறுமணம் பூசி
பஞ்ச்சனைக்கு அனுப்பபடும்
வாழ்க்கை தொகுப்பின்
மாதிரி கோப்பு;

நரன் எரியும் நாட்டுக்கு
தினம் பயணியை ஏற்றிபோகும்
எட்டுகால் நான்குபுடி வண்டி

7
Your rating: None Average: 7 (3 votes)

aro...'s படம்

"கம்மா கரை காதல் மொழிகள்"


அப்பனுக்கு போக்கு காட்டி
ஆத்தாளுக்கு சாக்கு சொல்லி
என் அத்தமக வருவா
எப்பவாச்சும்
முத்தமொண்ணு தருவா

அந்தி சாயும் நேரத்துல
குந்தியிருக்கும் என்ன நினச்சி
தத்தி தத்தி வருவா
பூக்களின் உயிர் உருவா.....

வரப்பு மேல வச்சி நடக்கும்
வெளுப்பு பட்டு  பாதம்
வலிக்க விடாமல்
வளர்ந்த புள் கூட்டம்

6.4
Your rating: None Average: 6.4 (5 votes)

aro...'s படம்

"இசை ஞானி"


சின்னதாயின் செல்லமகன்  ராசய்யா
சிர்லிர்க்கும் இசையின் ராசா ஐயா
அன்ன கிளி கன்னத்தில் முத்தமிட
ஆனந்தத்தில் அவர் மனம் சத்தமிட
அதுவே இசையாகி போனது
எட்டு திக்கும் கட்டுக்கடங்காமல்  ஆடுது

அவர் வீணையின்  அறுந்த நரம்பு
அழுது புலம்ப;ஆறாய்
அதில் அவதரித்தான புதுராகங்கள்;

7
Your rating: None Average: 7 (1 vote)

aro...'s படம்

"குப்பைத்தொட்டி கொலைகள்"



ஐயோ.... எரியுதே........!!!

உயிர் கருகுதே....!

இருட்டு  கூடத்தில்- நடந்த
திருட்டு கூடலில்
தேவையின்றி வந்த தீட்டா...?
நான்....?

அம்மா சாயலா...? அப்பன் சாயலா...?
பார்த்து சொல்ல யாரும் வந்தால்
பத்தினி தனம்,

பாதிக்க படும் என்பதால் தானோ....?

5.66667
Your rating: None Average: 5.7 (3 votes)

aro...'s படம்

"பாசக்காரங்க"


விளையாட்டு மைதானம்
வெயில் வாட்டும் நேரம்
வேப்பமர காற்று
வெப்பம் தீர அணைத்தது ;
அவப்போது அதன் மூக்குத்தி
பூ பொழிந்தது; மனம் குளித்தது;

விரும்பாத தனிமை
விடுமுறைக்கு போன நண்பர்கள்
நினைவை கொடுத்தது ;

என் நண்பர்கள்
விடுதிக்கு வந்த அன்று
தனிமை கொடுந்தி அணைக்க
குளிர் போட்டவர்கள்; தோள்மீது

8
Your rating: None Average: 8 (1 vote)

Syndicate உள்ளடக்கம்