nadinarayanan's படம்

காதல் வந்தால்


வானத்தை பாயாக
வைத்து படுக்கிறேன்

தலையனைக்கு ஏற்றதாய்
உள்ளது நிலவு

காலிற்கு வெள்ளியில்
வைத்துக்கொள்வேன்

விண்மீன் நெய்து
போர்வையாக்குகிறேன்

சூரியன் நாளைக்கு

4
Your rating: None Average: 4 (2 votes)

nadinarayanan's படம்

முரண்


குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு வாரியத்தை
கூட்டித்துடைக்கிறாள்
பன்னிரண்டு வயது சிறுமி

4
Your rating: None Average: 4 (1 vote)

nadinarayanan's படம்

பயம்


பயமில்லாத மனிதனை காட்டு
அவனைக்கண்டு நான் பயப்படுவேன்

4
Your rating: None Average: 4 (1 vote)

nadinarayanan's படம்

பூக்கள் விற்பனைக்கே


சில அம்மாக்கள்
குழந்தையை
பூ விற்க அனுப்புவது
குழந்தையின் முழம் சிறியது
என்பதற்காகவும் இருக்கலாம்

0
Your rating: None

nadinarayanan's படம்

குழந்தை


ஆடி ஆடி களைத்து
மின்கலம் முடிந்து
தூங்கியது பொம்மை
.............................
தூங்க மறுத்தது குழந்தை.........

read more poems at
http://naditamilpoems.blogspot.com

4.5
Your rating: None Average: 4.5 (2 votes)

Syndicate உள்ளடக்கம்