மூத்த பெண்ணின் திருமணம்
மகனின் வேலை வாய்ப்பு
மனைவியின் மூட்டுவலி
மளிகை கடை பாக்கி
கோவில் தாக்கரின் கோபம்..........
பூசாரியின் எண்ணத்தில்
பல சிந்தனைகளுடன்
உதடுகள் மட்டும்
மனப்பாடமாய் மந்திரம்
சொல்லி திரும்ப
அவரிடம் ஆசிர்வாதம்
பெற்று பிரசாதம் பெற
முண்டியடிக்கும்
பக்த ஜனங்கள்