ஞாபக சக்தி குறைவு
ஞாபக சக்தி அதிகம் வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்க முடியாது. பொதுவாக இயற்கையாக இந்த சக்தி சிலருக்கு மிக அபரிமிதமாக இருக்கும். சிலருக்கு இச்சக்தி குறைவாக இருக்கும். ஆரம்பத்தில் அதிகம் உள்ளள இச்சக்தி போக போக குறைவதும் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்கள்,பேராசிரியர்களுக்கு இந்த சக்தம அதிகம் தேவைப்படும்.
அறிகுறடிகள்:படித்தது, நிகழ்ந்தது,அனைத்தையும் மறந்து விடுதல்.
காரணங்கள்:முளையில் ஒரு பகுதியில் சேகரித்து வைக்க வேண்டிய செய்திகளை சேகரிக்க முடியாமல் ஆகுதல். அப்பகுதி சரியாக செயல்படாமை ஒரு காரணமாக கருதப்படுகிறது.
பரிசோதனை:தலைப்பகுதியை ஸ்கேன் செய்து கண்டறியப்படுகிறது. பொதுவில் இது மாதிரி நோயாளிகளை பார்த்து, கோட்டு அறிந்து மருந்து தரப்படுகிறது.
சிகிச்சை:ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவத்தில் மருந்துகள் உள்ளது. எளிய சிறந்து பக்க விளைவு ஏதும் இல்லாத நமக்கு நாமே தயார் செய்து கொள்ளும் சிறந்த சித்த மருந்துகள் பல உள்ளது.
செய்முறை: தேவையான பொருட்கள்:1.சீர்தில் கொடி,2.நாயுருவி,3.வாயுவிளங்கம்,4.போஷ்டம் 5.சங்குப்பி,6.தண்ணீர் விட்டான் கிழங்கு (தோட்டங்களில் கிடைக்கும்).6.வசம்பு,7.கடுக்காய் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்)
செய்முறை:மேற்கண்ட பொருட்களை தேவையான அளவு எடையில் சேகரித்து நன்றாக காய வைத்து ,மெல்லியதாக இடித்து பொடித்து துணியில் வடிகட்டிக் கொண்டு ஒரு பாட்டிலில்
பத்திரப்படுத்திக் கொண்டு சுமார் 10 கிராம் அளவில் மேற்படி சூரணத்தை மூன்று வேளை ஆகாரத்திற்கு முன்பு உட்கொண்டு பசும்பால் குடித்து வரவும். நல்ல ஞாபக சக்தி பெருகும்.
பத்திய முறைகள்: சைவ உணவு சாப்பிடவும். உணவில் வல்லாரை கீரை சேர்த்து வரலாம்.