கதை எழுதுபவரை விளம்பரம் எழுத சொன்னது தப்பா போச்சுடா!
ஏன்?
விளம்பரத்திற்கு கீழே அனைத்தும் கற்பனையே என்று எழுதி விட்டார்.
டாக்டர், என் பொண்டாட்டி நைட்டு தூங்கவே மாட்டேங்குறா. முழிச்சு முழிச்சு பார்த்துக்கிட்டிருக்கா டாக்டர்
டாக்டர்: எப்போலேந்து இப்படி இருக்கு?
எங்க வீட்டுக்கு அவ தங்கச்சி வந்ததிலேந்து டாக்டர்.
டாக்டர்:
தந்தை: என் பையனுக்கு தேவையான இரத்தம் கிடைச்சுருமா டாக்டர்?
டாக்டர்: பி பாசிட்டிவ் சார். நல்லதே நடக்கும்.
தந்தை: டாக்டர் என் பையன் இரத்தம் B பாஸிடீவ் இல்ல O நெகட்டிவ் சார்.
நோயாளி 1: டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை க்ளோஸ் பன்ரீங்க? நோயாளி 2: டாக்டர் தான் " அரை(றை) மூடி" டானிக் குடிக்க சொன்னார். நன்றியுடன் தில்லை.வேழவன்
உறவினர் ஒருவர் மருந்து விற்பனையாளராக உள்ளார். அவர் கம்பெனியின் மாதாந்திர கூட்டத்தில் வலி நிவாரணி பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியாம்.
வக்கீலுக்கும் டாக்டருக்கும் என்ன வித்தியாசம்
வக்கீல் சரியில்லைன்னா கேஸ் இழுத்துட்டே போகும் டாக்டர் சரியில்லைன்னா கேஸ் சீக்கிரம் முடிஞ்சிடும்
===================
டாக்டர், என் பையனை ஓடச்சொன்னீங்களா?
டாக்டர்: ஆமாபா
டாக்டர், காலைல எழும்பி ஓடச்சொன்னீங்களா டாக்டர்?
டாக்டர்: ஆமாபா, ஏன்?
ஏனா? பக்கத்து வீட்டு பொண்ணை இழுத்துட்டு ஓடிட்டான்யா
டாக்டர் : டாக்டர் கிட்ட எதையும் மறைக்கக்கூடாது. என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க
நம்மாள்: நீங்க நர்ஸை மறைக்காதீங்க, கொஞ்சம் தள்ளி உட்காருங்க
============
டாக்டரையா
சொல்லுங்கம்மா
நான் இன்னைக்கு என்ன கலர் சாரி உடுத்திருக்கேன்?
இதென்ன என்கிட்ட வந்து கேள்வி.. பச்ச கலர் சாரி உடுத்திருக்கீங்க
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)