(48) | (20) | (31) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (75) | (29)
1 வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
2 வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
3 வடக்கே கருத்தால் மழை வரும்.
4 வட்டி ஆசை முதலுக்கு கேடு.
5 வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணு அட்டிகை வித்து வட்டியைக் குடு
6 வணங்கின முள் பிழைக்கும்.
7 வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
8 வருந்தி உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாதது கோடிப் பெருமை
9 வருந்தினால் வாராதது இல்லை.
10 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
11 வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
12 வளவனாயினும் அளவறிந் தளித்துண்
13 வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
14 வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
15 வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
16 வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
17 வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
18 வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
19 வாழ்வும் தாழ்வும் சில காலம்.
20 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
21 விதி எப்படியோ மதி அப்படி.
22 வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்
3
23 வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
24 விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
25 விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
(48) | (20) | (31) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (75) | (29)