(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)
1 பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
2 பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
3 பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
4 பக்கச் சொல் பதினாயிரம்.
5 பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
6 பசியுள்ளவன் ருசி அறியான்.
7 பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
8 பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
9 பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
10 படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
11 படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
12 படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
13 படையிருந்தால் அரணில்லை.
14 பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
15 பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
16 பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
17 பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
18 பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
19 பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
20 பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
21 பணம் உண்டானால் மணம் உண்டு.
22 பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
23 பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
24 பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
25 பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)