(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)
1 தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
2 தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
3 தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
4 தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
5 தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
6 தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
7 தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
8 தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
9 தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
10 தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
11 தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
12 தருமம் தலைகாக்கும்.
13 தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
14 தலை இருக்க வால் ஆடலாமா ?
15 தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
16 தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
17 தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது
18 தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
19 தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
20 தவளை தன் வாயாற் கெடும்.
21 தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.
22 தாய் பாலுக்கு கணக்கு பார்த்தா தாலி மிஞ்சுமா
23 திருநீறிட்டார் கெட்டார்; இடாதார் வாழ்ந்தார்
1
(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)