(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)
1 சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
2 சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
3 சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
4 சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
5 சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்
6 சருகைக் கண்டு தணலஞ்சுமா
7 சர்க்கரை என்றால் தித்திக்குமா?
8 சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
9 சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
10 சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
11 சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
12 சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
13 சாண் ஏற முழம் சறுக்கிறது.
14 சாது மிரண்டால் காடு கொள்ளாது.
15 சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
16 சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
17 சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
18 சுக துக்கம் சுழல் சக்கரம்.
19 சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
20 சுட்ட சட்டி அறியுமா சுவை.
21 சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
22 சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
23 சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
24 சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
25 சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)