(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)
1 கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
2
2 கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
3 கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
4 கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்
5 கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
6 கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
7 கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
8 கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
9 கடல் திடலாகும், திடல் கடலாகும்.
10 கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
11 கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
12 கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
13 கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
14 கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
15 கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
16 கடுக்காய்க்கு அக நஞ்சு; இஞ்சிக்கு புற நஞ்சு
17 கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
18 கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
19 கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
20 கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
21 கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
22 கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
23 கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
24 கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
25 கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)