(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)
1 எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
2 எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
3 எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
4 எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
5 எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
6 எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
7 எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
8 எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
9 எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
10 எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
11 எதார்த்தவாதி வெகுசன விரோதி.
12 எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
13 எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
14 எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
15 எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
16 எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
17 எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
18 எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
19 எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
20 எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்
21 எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
22 எறும்பு ஊர கல்லுந் தேயும்.
23 எறும்புந் தன் கையால் எண் சாண்
24 எலி அழுதால் பூனை விடுமா?
25 எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)