(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)
1 இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
2 இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
3 இஞ்சி இலாபம் மஞ்சளில்.
4 இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
5 இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
6 இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
7 இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
8 இது பழமொழியன்று.... பொன் மொழி. ஒளவையார் பாடியது.
9 இனம் இனத்தோடு தான் சேரும்
10 இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
11 இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
12 இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
13 இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
14 இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
15 இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
16 இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை இராச திசையில் கெட்டவனுமில்லை
17 இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
18 இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
19 இராமன் ஆண்டா என்ன? இராவணன் ஆண்டா என்ன?
20 இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
21 இருவர் நட்பு ஒருவர் பொறை.
22 இரைச்சல் இலாபம்.
23 இறங்கு பொழுதில் மருந்து குடி
24 இறுகினால் களி , இளகினால் கூழ்.
25 இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)