(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)
1 ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
2 ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
3 ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே
4 ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
5 ஆனைக்கும் அடிசறுக்கும்.
6 ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
7 ஆரால் கேடு, வாயால் கேடு.
8 ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
9 ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
10 ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
11 ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
12 ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
13 ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
14 ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
15 ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
16 ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
17 ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
18 ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
19 ஆழமறியாமல் காலை இடாதே.
20 ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)