அணை போட்டு தடுத்து நிறுத்தி சேமித்த வெள்ளம்(நீர்) அணையை கடந்து விட்டால் அதன் பின் அதே அணைக்கு திரும்ப முடியாது.
சரியாக பயன்படுத்தப்படாமல் வீணாகும் வெள்ளம் பிறகு தேவைப்படும் நேரம் கிடைக்காது.
வாய்ப்பு என்பது வரும் போது அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்பு "அணை கடந்த வெள்ளம் போல" சென்று விட்டால் மறுபடி அந்த வாய்ப்பு வரும் என்று கூறமுடியாது. எனவே நேரத்தையும் வாய்பையும் பிறகு கவலைப்படாமல் இப்போதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
(2 votes)

