சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
மங்கல நிகழ்ச்சிகளுக்கு அவர்களாக கூப்பிட்டால் தான் போகவேண்டும். அழையா விருந்தாளியாக செல்வதில் மரியாதை இல்லை. ஆனால் துக்க காரியங்களுக்கு அழைக்காவிட்டாலும் சென்று பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்.
மங்கல நிகழிச்சியாக இருந்தால் அது அதிகமாக அல்லது கண்டிப்பாக ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட நிகழ்ச்சியாக இருக்கும். எனவே முன்னரே அழைக்க வேண்டியவர்களை அழைத்திருப்பர். அதைப்பொறுத்து நிகழ்ச்சியின் ஏற்பாடுகளையும் செய்திருப்பர்.
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டா என்பது போல நம்மை மதித்து அழைக்காதவர்களின் நிகழ்ச்சிகளுக்குச் செல்றால் நமக்கு மரியாதை இருக்காது.
ஆனால் துக்க காரியங்கள் சொல்லிவிட்டு வருவதில்லை. திடீரென வந்துவிடுகிறது. அந்நேரம் அவர்களுக்கு சொல்வதற்கோ அழைப்பதற்கோ மனநிலையும் நேரமும் இருக்காது. அதை அறிந்து நாமாக பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். துக்கத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு ஆறுதலாக இருப்போரை அவர்கள் எக்காலும் நன்றியுடன் நினைத்துக்கொள்வார்கள். எனவே நட்புணர்வை அதிகப்படுத்திக்கொள்ள அவர்களின் துன்பத்தில் நாமும் அழையாமலேயே சென்று பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்.

