கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா?
ஒரு நாள் கொங்கணவ முனிவர் காட்டில் தவமிருக்கையில் அவர் மீது ஒரு கொக்கு எச்சமிட்டுவிட்டது. அவர் கோபத்தோடு மேலே நிமிர்ந்து பார்த்தார். அவரது தவ வலிமையில் கொக்கு எரிந்து சாம்பலாகிவிட்டது.
அவர் ஒரு நாள் திருவள்ளுவர் வீட்டுக்கு தர்மம் கேட்டு வந்தார். அவர் கணவருக்கு பணிவிடை செய்துகொண்டிருந்ததால் நெடு நேரமாகியும் வள்ளுவர் மனைவி வாசுகி தர்மம் போட வரவில்லை.
பின்னர் வெளியே தர்மம் போட வந்த போது கொங்கணவ முனிவர் அதே கோபத்தோடு வள்ளுவர் மனைவியயைப் பார்த்தார். ஆனால் அவரது கோபம் வள்ளுவர் மனைவியை எரிக்கவில்லை. வள்ளுவர் மனைவி சிரித்துக்கொண்டே கொக்கு என்று நினத்தாயோ கொங்கணவா என்று கேட்டாராம். பத்தினிப் பெண்களுக்கு தவமுனிவரைவிட அதிக சக்தி உண்டு என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.
இது கண்டு கொங்கணவர் தன் அகம்பாவம் இழந்தார்


கருத்துகள்
unmaiyaga tamil kula
unmaiyaga tamil kula pengalauku siddhargalai vida thooya sakthikal irundhana enpathai kaatukirathu..