" அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்"

அருமையான முது மொழி

1. முயற்சி செய்யாமல் பலனை மட்டும் எதிர் பார்க்கும்
பலருக்கு செயலில்லாமல் விளைவு இல்லை என்பது புறியவில்லை, கண்ணன் கீதையிலே சொன்னது போல செயலை
அல்லது , கடமையை செய் பலனை எதிர் பாராதே...
அதாவது நீ கடமையை ஒழுங்காக செய்தாலே
பலனை நீ எதிர் பார்க்க வேண்டாம், தானாகவே வரும் என்னும் பொருள் பட சொன்னது போல கடமையைக் கூட செய்யாமல் இருப்பவர்களை கடமையை செய்யத்தூண்டுவது போல இந்த முதுமொழி அமைந்திருக்கிறது.

முயற்சி திருவினையாக்கும் என்பதைத்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும் என்று சொல்லி இருக்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது

2. ஒவ்வொரு மனிதரும் பிறக்கும் போது
அத்துணை நாட்கள் ஒரு தண்ணீர் நிரம்பிய
பையில் நீந்திக் கொண்டிருந்தாலும் ,
அந்த தண்ணீரிலும் அந்தக் குழந்தை ஸ்வாசிக்க
காற்றையும், தொப்புள் கொடி வழியே தாய்மையின்
உணர்வுபூர்வமான சக்தி , தாய் உண்ணும்
உணவிலிருந்தே எடுக்கப்பட்டு அக்குழந்தைக்கு ஏற்ப
அவ்வுணவை மாற்றி அனுப்பிய அபூர்வ சக்தியினால்,
உணவாக அனுப்பப்பட்டும் ,
அக்குழந்தை பாதுகாக்கப்படுகிறது....
அது மட்டுமல்ல தாயின் தொப்புள் கொடியிலிருந்து
தயாரிக்கப்படும் மருந்து அந்தக் குழந்தைக்கு மட்டுமல்ல
அனைத்து குழந்தைகளுக்கும் உயிர் காக்கும் ஜீவரசமாக
இருக்கிறது என்பதை விஞ்ஜானத்தில் கண்டு பிடித்து
அவைகளைப் பாதுகாக்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்
மேலும் தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று நம்
முன்னோர்கள் கூறியதையே இப்போதைய
விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்து
ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்
இப்படி இன்று நாம் கண்டு பிடிக்கும் அனைத்துமே
ஏற்கெனவே ஒருவன் கண்டு பிடித்து
செயலாற்றி இருக்கிறான் என்றால்..அவன்தான்
இறைவன் என்று ஒப்புக் கொள்வதில் தவறென்ன...?
ஏற்கெனவே அவன் உருவாவாக்கியதை கண்டு பிடித்த
நமக்கே விஞ்ஜானி என்று பெயரென்றால் உருவாக்கிய அவனை இறைவன் என்று சொல்வதில் தவறென்ன ....?

என்னே இறையின் சக்தி ,..!!!

என்னே இறையின் படைப்பு ரகசியம் யார் சொன்னது இறை இல்லையென்று...? தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்
அவனன்றி ஒரு அணுவும் அசையாது.

அப்படி பாதுகாப்பாய் இருந்த குழந்தை இயற்கையின் வழியே இந்த பூவுலகுக்கு வருவதற்காக இடையே நசுக்கப் படுகிறது.
நசுக்கப் பட்டு நழுவி முதலில் தலையைக் காட்டி பின் மொத்தமாக இந்தப் ப்ரபஞ்ஜப் ப்ரவேசம் அடைகிறது, அப்படி நசுக்கப் படும்போது
அது வரை அந்தக் குழந்தை ஸ்வாசித்த காற்றும் தடைப்படுகிறது
அந்தக் குழந்தை வெளியே வந்து பூமியில் விழுந்து அதன் உடல் இயக்கம் ஆரம்பிக்க இருக்கும் அந்த இடைவெளியில் அதற்கு மூச்சுவிட காற்று தேவை.

அந்தக் காற்று உள்ளே போகும் வழியை இது வரை இருந்த குடியிருந்த கோயிலின் கருப்பக் க்ரகத்தில் இருந்த கருணையே வடிவான தண்ணீரில் இருந்து விட்டு திடீரென்று வெளியே வரும் போது புறத்தில் இருக்கும் தண்ணீர் போய்விடும் ஆனால் உள் உறுப்புகளில் முக்கியமாக ஸ்வாசக் குழாயில் இப்போது அடைத்துக் கொண்டிருக்கும்,

அந்த தண்ணீர் வெளியேறினால்தான் காற்று
உள்ளே புக முடியும் அதற்குதான் குழந்தை முயற்சி செய்து
அழ ஆரம்பிக்கிறது உரக்கக் குரலெடுத்து அழ ஆரம்பிக்கிறது, அப்படி அந்தக் குழந்தை அழும்போது அந்த தண்ணீர் ஸ்வாசக் குழாயிலிருந்து
வெளியேறுகிறது , அப்படி தண்ணீர் வெளியேறியவுடன்
குழந்தை முதல் மூச்சு விடுகிறது.

அப்படி அழவில்லையென்றால் மருத்துவச்சிகள்
அடித்தாகிலும் அக் குழந்தையை அழ விடுவர்
ஏனென்றால் அழுதால்தான் மூச்சே முதல் மூச்சே விடமுடியும்
முதல் மூச்சு விட்டால்தானே பிழைக்கும்
பிழைத்தால்தானே பால் குடிக்கும் அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும் என்று ஆன்றோர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்.

விளக்கம்: தமிழ் தேனி

8
Your rating: None Average: 8 (1 vote)