அனாதை மரங்களாய்அகதிப் பூக்களாய்இழந்தது கணக்கிலைஇருப்பதுந் தெரியலைநெருப்புக் கோளமாய்உருத்தும் உணர்வுகள்இருத்துப் பார்க்கவேஇறுக்கும் வலியினால்பொறுக்க முடியலைவருத்தம் வறுப்பதால்கருத்த காவியம்வெறுத்த வாழ்க்கையாய்இருக்கும் பொதிலேதடுக்கா அறிவதுஎடுக்காதிருப்பதுஎன்ன என்பதைவிடுத்துப் போனதால்எண்ணிப் பார்ப்பதுநன்மை தருமெனநினைத்துப் பார்ப்பதால்குறைந்தா போகுவோம்
காக்கிறேன் பேரிலேதாக்கிடுந் தர்மமாய்நோக்கியே எழுவதுநோக்குமோ நல்வழி
அன்புள்ளங்களே , வணக்கம்.
இந்தப்பகுதியில் எனது சிற்றறிவுக்கு எட்டிய சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து வருகின்றேன் . இவை முழுக்க முழுக்க குறைமதி கொண்ட எனது சிந்தனைச் சிதறல்களே ஆகும். இவைகள் மற்றவர்களின் எந்த ஒரு ஆக்கங்களிலிருந்தோ , புத்தகங்களிலிருந்தோ தவறாகக் எடுத்துக் கையாண்டவை அல்ல. இவைகள் யாரையும் புண்படுத்தும் நோக்கிலும் அல்ல.
வலி வேட்டை தனியாதச்சுவை நாட்டும் பொழுதாகவிதிக் கோட்டின் வழியாகபலி கேட்கும் நேரங்கள்
உயிர் நாட்டில் இறவாதசுழி போட்டு விலகாதஉதிரத்தில் பதிவாகாஉறவாடும் புதிராகும்
வனக் காட்டின் விலங்காகமனக் கூட்டின் உதிரத்தைபணப் பேயாய்ச் சதையுண்ணதினம் கேட்கும் அதிகாரம்
மன வாழ்க்கை சதியாகமன வாட்டி உயிர் கேட்கபிணை கேட்ட வாழ்க்கையிலேபிள்ளைகளே கேடையமாம்
இதயத்தின் வலியாகபழி பாவம் ஓளியாதநேர்மைக்கு அணியாகதோள் தாங்கும் ரணக் கோலம்
மணி இரவு பனிரெண்டைத் தாண்டிருக்கும். அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அலறத் தொடங்கியது ரகுவின் செல்போன்.. சத்தம் கேட்டு முதலில் விழித்த ரகுவின் அப்பா அருகில் படுத்திருந்த ரகுவை எழுப்பி.,
வணக்கம் நட்பு நெஞ்சங்களே.. இன்றும் ஒரு புதிய கேள்வி பதிலோடு உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. இன்று நண்பர் ஒருவர் எழுதி அனுப்பிய ஒரு வில்லங்கமான கேள்வியோடு வந்திருக்கிறேன்.. வாருங்கள் கேள்விக்குள்ளே பயணிக்கலாம்...
சிநேகிதியுடன்.......
பறவைகளிடமிருந்து மொழி உருவாகியதாம்
உனது விழிகள் பேசும் மொழியினை அறிய
உலகம் முழுவதுமுள்ள பறவைகளின்
தனிக்குழு ஒன்று அமைத்திருகிறேன் !
உன் விழி இமைக்கும் நேரம்
எனது இதயம் துடிக்கிறது
உனது விழி வியந்த நேரம்
நமது காதல் உருவானது !
மொழி பற்றாளன்
இன்று விழி பற்றாளனாயி போனேன்
விழி மைதொட்டு
வீடு செல்லும் வழியெங்கும்
கவிதைகள் சொல்கிறேன் !
எந்த விரல் கொண்டு
விழிகளுக்கு மையிடுகிறாய்
விரல் நகத்திற்கிடையே
~~~* 8. ஆபத்து வலையில் சம்யுக்தன் *~~~
மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.....சூரியனின் வெப்பம் மெல்லத் தணிய ஆரம்பித்தது.
சுவரில் தொங்கும் கடியாரத்தையும் மேஜை மேலிருந்த தொலைபேசியையும் மாறி மாறி பார்த்தவாறு மைதிலி தவித்துக்கொண்டிருந்தாள்.
“அம்மா, டைம் ஆயிடுத்து... போலாம்மா...” , பதினாலு வயது ஸ்ருதியின் சிணுங்கல்.
“ப்ளீஸ்டா செல்லம், இன்னும் அஞ்சே அஞ்சு நிமிஷம், அப்பாகிட்டேர்ந்து போன் வந்தவுடனே கிளம்பிடலாம். இன்னிக்குனு பார்த்து செல்போன் வேற மக்கர் பண்ணி தொலைக்கறது.”
மகள் சூள் கொட்டியவாறு புத்தகப்பையை மாட்டிக்கொண்டு, டூவீலர் சாவியை எடுத்தாள், “நான் கீழே போய் வண்டியை ஸ்டார்ட் பண்ணி வெக்கறேன்ம்மா.”
பண்டைப் பெருமை யாவையுமே -க்ட்டிப்
====பரண்மேல் தூக்கிப் போட்டுவிட்டுத்
தொண்டை கிழியக் கத்துகிறீர்-உம்மால்
====துலங்கும் நன்மை ஏதுமிலை
அண்டை நாட்டில் அனுதினமும்- நம்
====அருமைச் சோதர் துடிக்கின்றார்
கண்ட தல்லால் என்செய்தீர்? =தமிழ்க்
====குலமென் றெங்கும் சொல்லாதீர்!
வீர மற்றப் பேடிகளே -என்றும்
====வெட்டிப் பேச்சில் வல்லவர்கள்
சார மென்று ஏதுண்டு?- வெறும்
====சக்கை தமிழர் கதைகள்காண்
சீறும் புலிகள் என்பவர்யார்? -புன்மைச்
====சிறுவ ளைவாழ் எலிகளெனக்
போதும் பெண்ணே நீயெனக்கு -உயிர்
====போகும் வரைக்கும் நானுனக்கு
வேதம் கண்ணே நீயெனக்கு -உடல்
====வேகும் வரைக்கும் நானுனக்கு!
பூஜை அறையின் விளக்காக -அடி
====நேற்று வரைக்கும் நின்றவளே!
பள்ளி அறையின் விளக்காகி -என்
====பருவம் ஆள வந்தவளே!
முகத்தைப் பார்க்கும் முன்னாலே -என்
====இதயம் இதயம் நீபறித்தாய்
முகத்தைப் பார்த்த பின்னாலோ- என்
====உயிரும் சேர்த்து நீபறித்தாய்!
உன்னைப் பார்த்த நொடியில்தான்- என்
====பிறவிப் பயனே பூர்த்தியாச்சு