• திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?


    பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.

    Choices

    0
    Your rating: None

  • yarlpavanan's படம்

    பொழுது போக்கிற்காக...


    முதலாம் ஆள் : படங்களில வாறது போல 'I Love You' சொன்னீங்களே! முடிவு என்ன ஆச்சுங்க?

    இரண்டாம் ஆள் : கவுண்டரின் மனைவியிடம் செந்தில் போய்க் கேட்டது போலக் கேட்டு, அதைப் பார்த்த கவுண்டர் எனக்கு உதைச்சுப் போட்டான் அண்ணே!

    மூன்றாம் ஆள் : விவேக் சரளாவிடம் போய்க் கேட்டது போலக் கேட்க, 'இஞ்சாருங்கோ' என்றதும் வடிவேலு வந்து "என் பெண்டாட்டியோட என்னடா விளையாட்டு" என்று அடிச்சு விரட்டிட்டான் அண்ணே!

    0
    Your rating: None

  • yarlpavanan's படம்

    கிழிஞ்சு போச்சு...


    திரைப் படங்களில்
    அரை குறை ஆடை ஆட்டமே
    பாலுணர்வத் தூண்டுகிறதே!
    அடப் போடா... அடிப் போடி...
    அப்படிக் காட்டாட்டா
    யாருங்கடா... யாருங்கடி...
    படம் பார்க்கப் போவாங்க...?
    படம் பார்த்தவங்களைப் பார்த்தா
    மாற்றான்/மாற்றாள்
    விழி உருள நோக்க
    நடிகர்/நடிகைகளின் கோலத்திலே
    நடை போடுறாங்களே!
    காலம் கடந்த பின்
    காதுக்கு எட்டிய செய்தி
    "எல்லாம் கிழிஞ்சு போச்சு!"

    6
    Your rating: None Average: 6 (1 vote)

  • yarlpavanan's படம்

    பொழுதுபோக்கிற்காக...


    நலமாக வாழ
    நல்ல பொழுதுபோக்குத் தேவை என்பதற்காக
    நம்ம இளசுகள்
    விளையாட்டரங்கிற்குச் சென்று
    உடற்பயிற்சி செய்வதாகவோ
    கடற்கரைக்குச் சென்று
    நீச்சலடிப்பதாகவோ
    எண்ணிவிடாதீர்கள்...!
    இன்னும்
    சொல்லப் போனால்
    இவங்க
    மருத்துவரைச் சந்திக்க
    ஒழுங்கு செய்வதன் நோக்கம்
    என்னவென்று கேட்காதீங்க...!
    எல்லாமே
    பொழுதுபோக்கிற்காக
    காதலிக்கப் போனதால
    கிடைத்த அறுவடைகளே!

    5
    Your rating: None Average: 5 (1 vote)

  • stellatamilarasi's படம்

    கவிதை


    அன்பே நீ இல்லா உலகில் உயிர் வாழ்வதை விட .......,,,,,
    நீ இருக்கும் உலகில் பிணமாக புதைத்து இருப்பேன் .......
    உன் பார்வைதான் என் மீது படவில்லை ...
    உன் பாதகளாவது என் மீது படட்டும்...........?

    5
    Your rating: None Average: 5 (1 vote)

  • kalyanasundaram's படம்

    ஒரு புரியாத ஸ்பரிசத்தில்


    புரிதலின் பயணிப்பில் நேசிப்பு
    பூத்துக் குலுங்கும்
    நினைவுகளில் தேன்சொரிந்து
    இதயம் குளிரும்
    வாசமிகு வாழ்வுக்கான
    வசந்த வாயில்கள்
    வழியெங்கும் வரவேற்கும் - ஆம்
    இதுதான் காதலின் மேன்மையென
    உள்ளங்கள்
    ஒரு புரியாத ஸ்பரிசத்தில் பரவசப்படும்!
    மார்கழிப் பனி பாவையர்க்கு
    உன்னத நோன்பானது
    சூடிக்கொடுத்தவளின் திருவாயால்!
    பயணிப்பின் எல்லை
    பயணிக்கும் திசையில்
    ஒரு இடமறிந்த உண்மை!

    8
    Your rating: None Average: 8 (1 vote)

  • kalyanasundaram's படம்

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.....


    அகரம் பயின்ற நாள் முதலே
    அன்னைத்தமிழில் பேசும் கலை கற்றோம்!
    ஆன்மிகம் வளர்த்த இன்தமிழ்
    ஆலம் விழுதாய் நிலமதில் நிலைத்தது!
    இதழியல் வரலாற்றில் இமயம் தொட்டு
    இணைய தளத்திலும் தடம் பதித்தது!
    ஈதலும் இசைபட வாழ்தலும் நம் தமிழர்
    ஈடிலா கொள்கையாய் சிரமேற்கொண்டனர்!
    உலகின் மொழிகளில் செம்மொழியென
    உன்னத இடம் கொண்டு உலவுகிறது!
    ஊருணி பலருக்கும் உதவுதல் போல்
    ஊக்கமுடன் நம் அறிஞரெல்லாம் செயல்படுவர்!

    6.5
    Your rating: None Average: 6.5 (2 votes)

  • aro...'s படம்

    "பெண்"மாலை


    அதோ...........
    அந்த சூரிய பெண்
    காரிருள் கணவனை
    தழுவ போவதை எண்ணி
    வெட்க பூ பூத்துவிட்டால்;
    வான வனாந்திரமும்
    சிவப்பை உடுத்தி
    உவகை கூட்டியது;

    நாள் முழுவதும் உலாவியவள்
    நாயகனை குலாவுவதை எண்ணி
    வெட்க பூ பூத்த நேரத்தில்
    தென்றலது வடை காற்றாய்
    அவள் ஆடை தொட‌
    அணைக்க முடியா அத்தீ
    அவனை அணைக்க‌ வளைந்ததால்
    குறுகி அத்தீ "அந்தீ"யானதோ.......?!!

    அவளின் அணைப்பில்; ஆனந்தத்தில்

    8.66667
    Your rating: None Average: 8.7 (3 votes)

  • rajudranjit's படம்

    ஆடியின் முன்!


    ஆடி முன் நின்றே வடிவது நோக்க‌
    வடிவது காட்டும் ஆடி உன் கண்ணில்
    படிவதுன் மனத்தின் எண்ணம் பிரதிபலிக்க‌

    பாடியாடி விளையாட்டு காட்டுவதுன்னியல்பு
    கூடி நிற்கும் கூட்டத்திற்கு நீ கூத்தாடி
    காற்றடிக்க கடல் சீறும் கலமது ஆட‌

    இடியிடிக்க மின்னல்வரும் ஒலி பின்பே
    முடிகட்டி மன்னனெனவாகினும் ஆடிக்காட்டும்
    பிடி சோற்றுக்கேங்கும் பரதேசியெனினும்

    மிக்கதொரு மகிழ்ச்சியென மன்னன் காண‌

    7
    Your rating: None Average: 7 (3 votes)

  • Ponvannan's படம்

    தமிழ்க் கவிதை நாயகனாய் வருவாய்


    குப்பாச வாழ்க்கை குலைந்து விழ வேண்டும்
    அப்பாநின் அருளை நினைந்து பெற வேண்டும்
    தப்பாமல் தவறாமல் உனதடியில் வீழ்ந்தே
    எப்போதும் உன்கருணை நிழலில் வாழவேண்டும்

    அய்யோ என அலறி ஆருயிரை விடுமுன்னே
    பொய்யான இவ்வாழ்க்கை பொருளுணர்த்தி ஆங்கு
    அய்யா உன்பதத்தை இறுகவே நான் பற்றி
    மெய்யாலும் மனமுருகி மகிழ்ந்திடவே வருவாய்.

    எந்நாளும் உனையன்றி யாரையும் நான் வாழ்த்திலனே
    உந்நாமம் என்நாவில் எப்பொழுதும் நடனமிட

    8
    Your rating: None Average: 8 (2 votes)