Flower's படம்

6 வருட நட்பு பிரிந்து போனது ஒரே ஒரு வார்த்தையில்..... காதலுக்கும் நட்புக்கும் கற்பு மட்டுமில்லை பிரிவும் உண்டென்று உண்ர்த்தியதுக்கு நன்றி நண்பா....
முகமறியா உன்னோடு இந்த 6 வருடமும் நான் பகிர்ந்துக் கொண்ட வார்த்தைகள் கூட உனக்கு சொல்லவில்லையா நான் உன்னிடம் கொண்ட நம்பிக்கையையும், நட்புண்ர்வையையும்..... ஒரே ஒரு வார்த்தையில் அனைத்தையும் முறித்து விட்டாயே" இனிமேல் நீயும் நானும் உயிர் நண்பர்களாய் இருக்க முடியாது என்று..."
இத்தனை வருடமாய் என் அனைத்து சோகத்தையும், சந்தோசத்தையும்,வலியையும், வேதனைகளையும் உன்னிடம்தானே முதலில் பகிர்ந்துக்கொண்டேன்....
அப்போதும் புரியவில்லையா.... என்னை ஒரக்கண்னால் பார்த்த பையன்களைப் பற்றிக் கூட என் பெண் தோழிகளிடம் சொல்லுவது போல் உன்னிடம் சொன்னேனே அப்போதும் விளங்கவில்லையா...
உன்னைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் உன் முகம் கூட அறியாமல் நீ செய்யும் வாதங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் என் நண்பன் சொன்னான் என்றால் சரியாகத்தான் இருக்கும் என்று நீ சொல்லுவதை எல்லாம் ஒத்துக்கொண்டேனே அப்போதும் புரியவில்லையா......என் நம்பிக்கையும், நட்புண்ர்வும்...
"என் வாழ்வின் முதல் நட்பின் தோல்வி வலியை நீ குடுத்துறுக்கிறாய் " என்பதை இப்போதும் என்னால் நம்பமுடியவில்லை.....ஆனாலும் தயவு செய்து மீண்டும் திரும்பிவராதே...... மீண்டும் ஒரு முறை உன்னை பிரிய நேரும் நிலைவந்தால் நான் உயிருடன் இருப்பேனா என்று என்னால் சொல்லமுடியாது...

Raj...

கருத்துகள்

yarlpavanan's படம்

நட்பில் பிரிவு வரலாம். மீள


நட்பில் பிரிவு வரலாம்.
மீள நட்பைப் புதுப்பிக்கலாம்
ஆனால்,
நீங்கள் சொல்ல வருவது...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Flower's படம்

இது பிரிந்துப் போன நட்பினைப்


இது பிரிந்துப் போன நட்பினைப் பற்றிய வார்த்தைகள் அல்ல....முறிந்துப் போன நட்பைப் பற்றிய இரத்தம் கசியும் வார்த்தைகள்....