உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!!
ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத ஆண்மகன் மலைப்
பாங்கானப் பகுதியில் நடத்து
சென்று கொண்டு இருந்தான். ஒரு மரத்தின் வேர் அவனது காலில் பட்டு மலையின்
கீழே விழ நேர்ந்தது. கீழே உருலும் போது மனதில் சிறியப் பயம் உருவாகியது.
அவன் நினைத்தான் கடவுள் என்று ஒருவர் இருந்தால் என்னைக் காப்பாற்றட்டும்
என்று. அவன் நினைத்தவுடன் ஒரு மரக் கிளைத் தடுத்து அவன்
தொங்கிகொண்டிருந்தான். அப்போது அவன் மனம் நினைத்தது நாம் கடவுளை
அரைகுறையாக நம்பினோம் அரைகுறையாக காப்பாத்தப்பட்டோம் முழுமையாக நம்பினால்
முழுவதுமாக காப்பாத்தப்படுவோம் என்று நினைக்க ........ மேலிருந்து ஒரு
சப்தம் கேட்டது மகனே இப்போதவது நீ நம்புகிறாயா? .... சரி நீ என்னை
(கடவுள்) அரைகுறையாக நம்பினாய் அரைகுறையாக காப்பாத்தப்பட்டாய் நீ என்னை
முழுவதுமாக நம்பினாய் என்பதற்கு மரக் கிளையிலிருந்து கையை எடு நான் உன்னை
மீண்டும் காப்பாத்துகின்றேன் என்றது.
நம்மில் எதனைப் பேர் கையை விடுவோம்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
உங்கள் மனதில் எந்த எண்ணம் முதலில் தோன்றியதோ (கையை எடுப்பது அல்லது
எடுக்காமல் இருப்பது) அதுவே நீங்கள் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை.
கருத்துகள்
அருமையான விளக்கம் தர்ஷி
அருமையான விளக்கம் தர்ஷி
ஒரு மரக் கிளைத் தடுத்து
ஒரு மரக் கிளைத் தடுத்து அவன்
தொங்கிகொண்டிருந்தான்.///இது கடவுளுதான் மரகிளை கொடுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்,
மேலிருந்து ஒரு
சப்தம் கேட்டது மகனே இப்போதவது நீ நம்புகிறாயா?///கடவுள் சப்த்தம் கேட்டாஉடனே முத்தி அல்லவா,அதன் பிறகு கை விட்டால் என்ன விடாவிட்டால் என்ன,,,
முக்தி என்பது அந்த கடவுள்
முக்தி என்பது அந்த கடவுள் ஆதல்
அரிசந்திரன் சார் சொல்ற முக்தி
அரிசந்திரன் சார் சொல்ற முக்தி மீண்டும் பிறவாமை.
இவ்வளவு பேசின கடவுள் அதை கொடுப்பாரா?
சந்துரு
முக்தி கொடுப்பாரென்றால் நான்
முக்தி கொடுப்பாரென்றால் நான் இந்த நொடியே இறக்க தயார்.
சந்துரு
சரியான பதில். நான் செஞ்ச
சரியான பதில்.
நான் செஞ்ச பாவங்களின் மீதுள்ள நம்பிக்கைதான்.
சந்துரு
இறவா பெருவாழ்வே"என்ன
இறவா பெருவாழ்வே"என்ன அர்த்தம்
சந்துரு
ஆனால் திரும்ப அந்த பாவங்களை
ஆனால் திரும்ப அந்த பாவங்களை செய்தால்?
சந்துரு
பிறப்பு இறப்பு இல்லாத
பிறப்பு இறப்பு
இல்லாத வாழ்வு
மனிதனனுக்கு எப்போ கிடைக்கும்.
சந்துரு
"எவன் ஒருவன் தான் செய்த
"எவன் ஒருவன் தான் செய்த பாவங்களை எண்ணி உண்மையாக வருந்துகிறானோ அப்போதே அவன் அந்த பாவங்களில் இருந்து விடுபடுகிறான்"
அப்போ முக்திக்கு பாவங்களிலிருந்து விடுபட்டால் மட்டும் போதாதா?
சந்துரு
சரியான பதில்.கடமைகள்
சரியான பதில்.கடமைகள் முடிந்தவுடன் முக்திக்கு முழுமனதாக முயழ்கிறேன்.
சந்துரு
சந்துரு கடமை என்பது எதற்கு
சந்துரு கடமை என்பது எதற்கு ,,,அது எப்பம் முடியும்,
இந்த புவியில் என் பிறப்பின்
இந்த புவியில் என் பிறப்பின் மேல் எனக்காக விடுக்கப்பட்ட வேலைகள்(குடும்பம்).
சந்துரு
அதுதான் கடமை. நம்மை
அதுதான் கடமை. நம்மை இப்புவியில் பிறக்க காரணமாய் இருந்தார்கள். பணி செய்வது கடமை. நன்றி கடன் ஆகாது.
சந்துரு
ஆம், தொடக்கம் இருந்தால்
ஆம், தொடக்கம் இருந்தால் முடிவு இருக்கும்.
சந்துரு
இனிய போகி வாழ்த்துக்கள். பழைய
இனிய போகி வாழ்த்துக்கள்.
பழைய துன்பங்களை மறந்திடுங்கள் .
நம்மிடையே ஏதாவது மனஸ்தாபங்கள் இருந்தால் மறக்கவும் மன்னிக்கவும்.
நிச்சயம் இலங்கை தமிழர்களுக்கு தை பிறக்க வழி பிறக்கும்.
நல்வாழ்த்துக்கள்.
சந்துரு
அமா பக்கத்துக் கடையில
அமா பக்கத்துக் கடையில கிடைக்கும் முக்தி போய் பிறாயசித்தம் சொய்துவிட்டு வாங்கி வாங்க,,,
///முக்தி என்பது அந்த கடவுள் ஆதல்///
முக்தி யை அடைதல் என்றநிலை அல்ல அது அதுவாக ஆதல் எது நிஜமோ அது ஆதல்,,,
தர்ஷினியின் விழக்கம் ஆ,,,ருமை
அது நாடு சம்பந்தபட்டது
அது நாடு சம்பந்தபட்டது அல்ல.
தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகை.
தை மாதத்தில் புது வாழ்வை ஆரம்பிக்க, மார்கழி கடைசி நாளில்(பொங்களுக்கு முதல் நாள்) வீட்டை சுத்தம் செய்து, பழைய பொருட்களை எரித்து.....
நீங்கள் தளபதி படம் பார்த்ததில்லையா?
சந்துரு
மொத்தத்தில் பழையன கழிதலும்
மொத்தத்தில் பழையன கழிதலும் புதியது புகுதலும் தான் பொங்கல்.
சந்துரு
கலைஞர் வருடபிறப்பு
கலைஞர் வருடபிறப்பு எப்படியிருக்கு
நீங்க எந்த நாளை புது வருசமா
நீங்க எந்த நாளை புது வருசமா சொல்றீங்க?
சந்துரு
தமிழனுக்கு இப்ப இதுலையும்
தமிழனுக்கு இப்ப இதுலையும் குழப்பம் வந்தாச்சு.
ஜோதிடம் எதை சொல்கிறது?
தமில் ஜோதிடத்தின்படி இது எத்தனையாவது வருடம்?
ஒரு5000 வருசங்கள் முடிந்துவிட்டதாமே!
சந்துரு
கதையை பாதியில்
கதையை பாதியில் நிறுத்திட்டாங்க தர்ஷினி
அப்போது இரவு நேரம்...
கடவுள் குரல் கேட்டு கை எடுக்க மனது அவருக்கு வரவில்லை, விடியும வரைதொங்கிக்கொண்டிருந்தான்.
விடிந்த பின்தான் தெரிந்தது. தொங்கிக்கொண்டிருந்த காலுக்கு பக்கத்திலேயே தரை இருப்பது. இரவு கையை விட்டிருந்தால் விடியும் வரை தொங்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.
--
ஒருவேளை உங்களுக்கு இப்படி ஏதாவது ஆகி இந்த கதையில் வருவது போல கையை விட்டுப்பார்ப்போமே என்று விட்டு இடுப்பு எலும்பு ஒடிந்து கிடந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல, ஹிஹி
கடவுளாச்சு நீங்களாச்சு
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
முழு கதை திருப்தியை
முழு கதை திருப்தியை தந்துவிட்டது.
சந்துரு
























