தேவையானவை;
1.ஒரு நீளமான கம்பி
2.சில கோழிகள்
3.கல் நெஞ்சம்.
(இளகிய மனம் கொண்டவர்களும் இதயம் பலகீனமானவர்களும் மேற்கொண்டு படிக்க வேண்டாம்)
முதலில் 10 கோழிகளை பிடித்து கழுத்தை திருகி கொல்லவும். இப்போது இதை மிதமான வென்னீரீல் நனைத்து அதன் இறக்கைகளை பிய்த்து எறியவும். இப்போது உறித்த கோழி தயார். இப்போது நீளமான கம்பியில் ஒவ்வொரு கோழிப்பிணத்தையும் சொருகவும்.அவற்றின் மீது வெண்ணையையும் மசாலாவையும் குழைத்து பூசவும்.
இப்போது கீழே நெருப்பை எறியவிட்டு அதன் தணல் மேலே படும் அளவில் வைத்து கோழிப்பிணங்களுடன் கூடிய கம்பியை மெதுவாக சுழலும்படி அமைக்கவும். சில மணிநேரங்களுக்கு பிறகு பதமான கிரில் சிக்கன் ரெடி. இப்போது அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து பிய்த்து வாயில் திணித்து அனைத்தையும் கபளீகரம் செய்யவும்
(செயல்முறை உபயம்; ஆதி காட்டுவாசிகள்)
கருத்துகள்
koodave neengalum aduppile
koodave neengalum aduppile ukkarnthukkungappa. 
என்னய்யா கொடுமை இது... போன
என்னய்யா கொடுமை இது...
போன வாரம் தான் சுடுதண்ணி வைக்க கத்துக் கொடுத்தாங்க ஒரு மேடம்...
இப்பொ நீங்க தோசை, க்ரில் சிக்கன்..
கண்ணைக் கட்டுது சாமி......

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
யாரு உங்க கிட்ட சொன்னாரா...
யாரு உங்க கிட்ட சொன்னாரா...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
எங்கேயிருந்துய்யா கிளம்பி
எங்கேயிருந்துய்யா கிளம்பி வறீங்க...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
உருண்டு வந்திட்டார்
உருண்டு வந்திட்டார் போலிருக்குது. இல்லை விரட்டி அடிச்சிட்டாங்களா 









