இட்டலிகள் 5
மைதாமாவு 5 தேக்கரண்டி
பிரட்கிரம்ஸ் அரை கப்
உப்பு, மிளகாய் தூள், எண்ணெய் இவைகள் தேவைக்கு ஏற்ப
முதலில் இட்டலிகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்பு தனியாக மைதாமாவுடன் மிளகாய்தூள் உப்பு போன்றவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது இட்டலி துண்டுகளை மைதா மாவுடன் புரட்டி பின்பு பிரட் கிரம்ஸுடன் லேசாக புரட்டி தனியாக வைக்கவும்.
இப்போது வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் இட்டலி துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.
மீதமுள்ள இட்டலிகளை இவ்வாறு ப்ரை செய்து தொட்டுக்கொள்ள ஏதாவது சாஸ் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.
செய்து பாருங்கள்

கருத்துகள்
ஃப்ரட் இட்லி நன்றாக உள்ளது
ஃப்ரட் இட்லி நன்றாக உள்ளது செய்து பார்த்தேன் நன்றி
Mrs.Lathabaalu
Mrs.Lathabalu


















