VISWAM's படம்

தேவையான பொருட்கள்: 

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்

பீன்ஸ் 10

காரட் 2

உருளைக்கிழங்கு 2

பட்டாணி 1/2 கப்

பச்சைமிளகாய் 2

தேங்காய்பால் 1 1/2 கப்

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானவை

-------

அரைக்க:

சோம்பு 1 டீஸ்பூன்

கசகசா 1/2 டீஸ்பூன்

முந்திரிபருப்பு 10

பூண்டு 4 பல்

-----

தாளிக்க:

பட்டை 1 துண்டு

லவங்கம் 2

------

செய்முறை:

பாசுமதி அரிசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.தண்ணீர் நன்றாக வடிந்ததும் நெய்யில் அரிசியை

5 நிமிடம் வறுக்கவேண்டும்.

பீன்ஸ்,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கவும்.

உருளைக்கிழங்கை தோலுரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைக்கவும்.

----

கடாயில் எண்ணைய் வைத்து பட்டை,லவங்கம் தாளித்து பொடியாக நறுக்கிய பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு,

பட்டாணி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் வதக்கவேண்டும்.அரைத்த விழுது,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

வறுத்த பாசுமதி அரிசியுடன் தேங்காய்பால் 1 1/2 கப்.தண்ணீர் 1 1/2 கப் வதக்கிய காய்கறி கலவை எல்லாவற்றையும் நன்றாக கலந்து ele.cookerல்

வைக்கவேண்டும்.

onionரெய்தா,குருமா இரண்டும் இதற்கு ஏற்றது.

நன்றி : Kanchana Radhakrishnan

2
Your rating: None Average: 2 (2 votes)

கருத்துகள்

Indhurag's படம்

good


3

good

VISWAM's படம்

நன்றி


நன்றி