asima's படம்

தேவையான பொருட்கள்: 

நறுக்கிய காய்கறிகள் - 1 கப்
வெங்காயம் - 1 கப்
பச்சைமிளகாய் - 1
தக்காளி - 2
இஞ்சி-பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
கடுகு - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்

அரைக்க
தேங்காய் - 1/4 மூடி
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2
பட்டை - சிறு துண்டு
சோம்பு - 1/2 ஸ்பூன்
கசகசா - 1/2 ஸ்பூன்
முந்திரி (அ) வேர்க்கடலை - 6

காய்களை நடுத்தரமான அளவுகளில் கட் செய்யவும்

அரைக்க வேண்டிய பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும்
கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போடவும்...கடுகு பொரிந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி மஞ்சள்தூள் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.

தேவையான தண்ணீர் சேர்க்கவும். காய்கள் பாதி வெந்ததும் நறுக்கிய தக்காளி, சேர்க்கவும்
மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும்

3 நிமிடங்கள் கழித்து அரைத்து வைத்துள்ள மசாலா கலவை சேர்த்து கிளறி விடவும்.
மிதமான தீயில் குருமாவை நன்கு கொதிக்க விடவும்.
கடைசியாக மல்லி இலை தூவி இறக்கவும்.

6
Your rating: None Average: 6 (1 vote)

கருத்துகள்

vinoth's படம்

பச்சை பட்டாணி எல்லாம்


பச்சை பட்டாணி காலிப்ளவர் எல்லாம் போடுவாங்களே, இதுல பேடவேண்டாமா அசிமா?


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


asima's படம்

வினோத் பச்சை பட்டாணி


வினோத் பச்சை பட்டாணி காலிப்ளவர் மட்டும் இல்ல உங்களுக்கு புடிச்ச காய் எல்லாம் போடலாம். இதை செய்சி சாப்பிட்டு எப்படி இருந்துச்சினு சொல்லுங்க.வினோத் மட்டன் பிரியானி எப்படி
செய்யிரதுனு கேட்டிங்க இல்லைய சீக்கிரம சொல்லிதாரேன் நீங்க அதை செய்து கட்டாயம் சாப்பிட்டு எப்படி இருந்துச்சினு சொல்லனும் ஓகே Smile

vinoth's படம்

அடப்பாவி, நான் எப்போ மட்டன்


அடப்பாவி, நான் எப்போ மட்டன் பிரியாணி பத்தி கேட்டேன்,

நானெல்லாம் தயிர்சாதம் சாப்பிடுறவா வேணா ம். வலிக்குது.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Indhurag's படம்

நல்லா வேணும்பா


நல்லா வேணும்பா Smile

paramaswari's படம்

எதை வேன்டுமானாலும் போடலாம்


எதை வேன்டுமானாலும் போடலாம் வினோத். சாப்பிடப்போவது நீங்கள்தானே தம்பி.

VISWAM's படம்

அருமை


அருமை

Indhurag's படம்

ஹாய்


உங்கள் அனுபவம் எப்படி சொல்லவே இல்லையே! Big smile