nandhini's படம்

தேவையான பொருட்கள்: 

கடலை மாவு 250 கிராம்
பச்சை அரிசி மாவு- 150 கிராம்
வெங்காயம் - 2
மிளகாய் - 2
வெள்ளைப் பூண்டு - சில பரல்கள்
எண்ணை, உப்பு, கறிவேப்பிலை, சோடா உப்பு - தேவைக்கு

வெங்காயங்களை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

தனியாக மிளகாய் மற்றும் வெள்ளைப் பூண்டையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

கடலை மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்றாக சலித்து அதனுடன் உப்பு, அரைத்தவை, வெட்டிய வெங்காயம், சோடா உப்பை சேர்த்து கலக்கவும்.

வாணலில் எண்ணெயை வி்ட்டு லேசாக சூடானதும் இரண்டு கரண்டி எடுத்து மாவில் விட்டு நீர் விடாமல் கலக்கவும்.

எண்ணெயை சூடானதும், கலந்து வைத்திருக்கும் மாவை கையால் (மாவில் எண்ணை விட்டதால் கை சுட்டு்ககொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்) பிசைந்து சிறுசிறு துண்டுகளாக போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
இடனுடன் கறிவேப்பிலை பொரித்து கிளறி எடுக்கலாம்.

Star Star Star Star

6
Your rating: None Average: 6 (2 votes)

கருத்துகள்

VISWAM's படம்

தூள் பஜ்ஜிதான் பக்கோடா


தூள் பஜ்ஜிதான் பக்கோடா ஆகியிருக்கிறது. மதுரை காலேஜ்கவுசில் சூப்பராக இருக்கும்.

Indhurag's படம்

ennikkume pakodaa superthanpa


ennikkume pakodaa superthanpa Big smile

nandhini's படம்

thanks


6

thanks


Nandhu