prabakaranmuthiah's படம்

தேவையான பொருட்கள்: 

வெண்டை 5
பூண்டு 5 பல்லு
சின்ன வெங்காயம் 7
இஞ்சி சிறிய துண்டு
பச்சை மிளகாய் 3
கடுகு உளுந்தம் பருப்பு
தேங்காய் 2 தூண்டு
மஞ்சள் தூள்

வெண்டை காய் சிறிது சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
அதனை எண்ணையில் வதக்கி வைத்துக்கொள்ளவும்.
பூண்டு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் அனைத்தையும் அரைத்துக்கொள்ளவும்.
அதனை நன்றாக வதக்கி விடவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின் வதக்கிய வெண்டை அதனுடன் சேர்கவும்.பின் மஞ்சள் பொடி சேர்கவும். இக்கலவை உடன் மோரை சேர்க்கவும். ஒரு கொதி விட்டு இறக்கி வைக்கவும்.
கடுகு உளுந்து சிறிய வெங்காயத்துடன் தாளித்து அதில் கொட்டவும்.
பருமாறுவதர்கு மோர் குழம்பு தயார்

5.5
Your rating: None Average: 5.5 (4 votes)

கருத்துகள்

vinoth's படம்

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி


4

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Indhurag's படம்

வெங்காயம், வெள்ளைப்பூண்டு


8

வெங்காயம், வெள்ளைப்பூண்டு போட்டு செய்வதற்குப் பதில் க.பருப்பு கொஞ்சம், து.பருப்பு கொஞ்சம் ஊற‌வைத்து அத்துடன் தேங்காய் சீரகம், ப.மிளகாய் சேர்த்து அரைத்து பின்பு அத்தோடு சிறிது மோரும் சேர்த்தால் சூப்பராக இருக்குமேப்பா!

Indhurag's படம்

வெங்காயம் சேர்த்தால் மோர்


8

வெங்காயம் சேர்த்தால் மோர் குழம்பு வாசனைப் போயிடுமே. பின்பு வாணலியில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து அத்தோடு சௌசௌ, வெண்டைக்காய் சேர்த்து வதக்கி அத்தோடு அரைத்த விழுதை சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி வாணலியில் விடவும். அது நுரைத்து வந்தவுடன் இறக்கிவிடவும். சூப்பரோ சூப்பர் Exclamation Mark

manmadhan's படம்

சென்னை வெயிலுக்கு


5

சென்னை வெயிலுக்கு மோர்க்குழம்பு சூப்பரா இருக்கும் இந்து..


மதன் மன்மதன்