VISWAM's படம்

தேவையான பொருட்கள்: 

தேவையான பொருள்கள்:

அவரைக்காய் - லி கிலோ,
பச்சை மொச்சைப் பயறு- 100 கிராம்,
மிளகாய் வற்றல் -6,
பெருங்காயம் - லி ஸ்பூன்,
துவரம் பருப்பு - 100 கிராம்,
கடுகு, சீரகம் - 1 தேக்கரண்டி,
உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

அவரைக்காயைப் பொடியாக நறுக்க வும். கடுகு தாளித்து, நறுக்கிய அவரைக் காயையும், மொச்சைக் காயையும் சேர்த்து, உப்புப் போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். அரை மணி நேரம் ஊறிய துவரம் பருப்புடன், பெருங்காயம், வர மிளகாய், சிறிதளவு உப்பு போட்டு சீரகத்தையும் சேர்த்துக் கரகரப்பாக அரைத் துக் கொள்ளவும்.

தேவையான அளவு எண்ணெய் விட்டு பருப்புக் கலவையைச் சுருள வதக்க, நன்றாக வெந்து, உதிர் உதிராக ஆகிவிடும். பிறகு அதனுடன் காய்கறிக் கலவையையும் சேர்த்து வதக்கவும். கறிவேப்பிலை போட்டு உதிரான பருப்பு உசிலியை இறக்கவும்.

மிக மிக மணமுள்ள, ருசியுள்ள அவரைக்காய் மொச்சைக் கறி தயார்!

நன்றி : மங்கையர்மலர்.

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

பொங்கல் ஸ்பெசல் கறி என்றால்


பொங்கல் ஸ்பெசல் கறி என்றால் இன்று சமைத்துவிட்டு வைத்து இருந்து பொங்கல் அன்று சாப்பிடனுமா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


VISWAM's படம்

வரும் பண்டிகை தைப்பொங்கல்.


வரும் பண்டிகை தைப்பொங்கல். அச்சமயத்தில் இவ்வகையான காய்கறிகள் அதிகமாக கிடைக்கும். அந்த நேரத்தில் விருந்தினர்களும் அதிகமாக வ்ருவார்கள். அப்பொழுது புதிது புதிதாகச் செய்து போட்டால் நன்றாக இருக்கும். அதனால்தான் ஸ்பெச்ல். நன்றி