கோதுமைமாவு ஒரு கப்
மைதாமாவு ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு தேவையான அளவு
கோதுமை மாவையும்,மைதா மாவையும் சேர்த்து சூடு நீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து நல்ல பதமாகும் வரை பிசையவும்.
பிசைந்த மாவில் லேசாக எண்ணெய் தடவி சிறு சிரு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையையும் தோசை போல சிறிதாக பலகையில் உருட்டி வைத்து வரவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் வைத்து சூடானதும் பூரியை போட்டு பொரித்து எடுக்கலாம்.
1. மாவு பிசையும் போது சூடு தண்ணீர் விட்டு பிசையவும். அதில் வாசனைக்கு சீரகம், லேசான கிராம்பு, ஏலக்காய், பட்டை இந்த பொடிகளை போட்டால் மணமாக இருக்கும்.
2. தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு கரி, தக்காளி கறி, கடலை கறி, போன்றவை நன்றாக இருக்கும்.
3. எண்ணை முக்கிய சூடான கரண்டியை பூரியின் மேல் பாகம் வைத்து அழுத்தி எடுத்தால் பூரி நன்றாக உப்பி வரும்.
4. மாவை பூரியாக உருட்டும் போது தண்ணி படாத மாவை வைத்து உருட்டினால் பூரி பலகையில் ஒட்டாமல் வரும்.
கருத்துகள்
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
neeye seithu neeye sappitta
neeye seithu neeye sappitta nanga enna panrathu
தாங்கள் சொல்வது எல்லாம்
தாங்கள் சொல்வது எல்லாம் சரிதான். நன்று.










