vinoth's படம்

தேவையான பொருட்கள்: 

பச்சையரிசி 2 கப்
பால் அரை லிட்டர்
வெண்ணை நாலு டீஸ்பூன் அளவு
தயிர் மூன்று பால் கரண்டி அளவு
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது
தாளிக்க - ரிபைண்டு ஆயில், கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை

மேலே தூவ: பச்சைமிளகாய், மாங்காய், வெள்ளரிக்காய், காரட், கருப்பு/பச்சை விதையில்லா திராட்சை

முதலில் அரிசியுடன் பால், நீர் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் குழைந்ததும் அதனுடன் உப்பு, தயிர் சேர்த்து சூடான பால் சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.
அதை மூடி கொஞ்சம் வேகவைத்து இறுகியவுடன் மேலும் சூடு பால் சேர்த்து மூடி வைக்கவும்
மேலும் 5 நிமிடங்களில் மேலும் பால், வெண்ணை சேர்த்து கலக்கி சாப்பிடும் பதத்திற்கு கொண்டு வரவும்.

அதை இறக்கி வைத்துவிடவும்.

பிறகு தாளிக்க எண்ணையை விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகு, இஞ்சி, கறி வேப்பிலை போட்டு தாளித்து சாதத்தில் விட்டு சேர்த்து கலந்து வைக்கவும்.

கொத்தமல்லித் தழையும் போட்டால் மணமாகவும் இருக்கும்.

இதன் மேல் தேவையானவற்றை தூவி சாப்பிடலாம்

0
Your rating: None

கருத்துகள்

Indhurag's படம்

enpaa thayir saathaththukku


enpaa thayir saathaththukku vanthutteenga Sad(