VISWAM's படம்

தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்: 

தே.பொருட்கள்:
பழுத்த தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 15
பூண்டுப்பல் - 5
இஞ்சி - 1சிறுதுண்டு
புளி - 1சிறிய நெல்லிக்காயளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 6
கறிவேப்பிலை -சிறிது

செய்முறை :

*வெங்காயம்+தக்காளி+பூண்டு+இஞ்சி பொடியாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பூண்டு+இஞ்சி வதக்கவும்.

*வதங்கியதும் தக்காளி+புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

*ஆறவைத்து தேவையான உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

நன்றி : SASHIGA

0
Your rating: None

கருத்துகள்

vinoth's படம்

எனக்கு பிடித்த தக்காளி சட்னி


எனக்கு பிடித்த தக்காளி சட்னி போட்ட விஸ்வம் ஐயாவிற்கு நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


VISWAM's படம்

நன்றி


நன்றி

paramaswari's படம்

தக்காளி துவையல்


இதற்குப் பெயர் தக்காளி துவையல் இல்லையோ![ஆமாம்தானே] ஆமாம்.

vinoth's படம்

கட்டியா வேக வைக்காம இருந்தா


கட்டியா வேக வைக்காம இருந்தா துவையல்
கொஞ்சம் தண்ணியா தாளிச்சு வேகவைத்து கறியா இருந்தா சட்னி
எப்படி நம்ம நளபாகம்?


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


VISWAM's படம்

நன்றி


நன்றி

VISWAM's படம்

நன்றி


நன்றி

paramaswari's படம்

அப்படி இல்லை வினோத்,


அப்படி இல்லை வினோத், எல்லாவறையும் சேர்த்துஅரைத்து எடுத்தால்
துவையல்.தாளிச்சு வேகவைத்து எடுத்தால் சட்னி.அவ்வளவே!

vinoth's படம்

என்னடா புதுக்கதையா


என்னடா புதுக்கதையா இருக்கு
நான் சொன்னதையே திரும்பச்சொல்றாங்க,
நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


paramaswari's படம்

கெட்டியாக இருக்குதா?தண்ணியா


கெட்டியாக இருக்குதா?தண்ணியா இருக்குதா என்பதல்ல விஷயம். அரைத்து எடுத்து வைத்தால் துவையல். தாளித்து வேக வைத்து எடுத்தால் சட்னி.விளங்குதோ!

vinoth's படம்

ஹையோ ஹையோ இதைத்தானங்க நானும்


ஹையோ ஹையோ
இதைத்தானங்க நானும் சொல்லியிருக்கேன்.

ஆனா கெட்டியா இருந்தாத்தான் துவையல்னு சொல்வாங்க, தண்ணியா இருந்தா அது கறி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


sumathy.a's படம்

தக்காளிச்சட்னி ரொம்ப


தக்காளிச்சட்னி ரொம்ப நல்லாயிருந்தது.

swarathi's படம்

Thanks for the guidance


Thanks for the guidance


ஸ்வரதி