தேவையான பொருட்கள்:
தேவையானவை
ஆட்டுகறி - 1/2 கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 4
சீரகம், மிளகு, சோம்பு - தலா 1 தேக்கரண்டி
பட்டை, லவங்கம் - சிறிது
கா மிளகாய் - 6
இஞ்சி - பெரிய துண்டு
பூண்டு - 2 முழுதாக
ப மிளகாய் - 4 கீறியது
தேங்காய் - 2 பத்தை
செய்முறை
- கறியை வேக வைக்கவும். இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், மிளகு, காய்ந்த மிளகாயை எண்ணெய்விட்டு வதக்கி அரைக்கவும்.
- வெங்காயத்தையும், தக்காளியையும் நான்கு துண்டுகளாக அரிந்து எண்ணெய் விட்டு வதக்கி அரைக்கவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து, எண்ணைய் ஊற்றி, காய்ந்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கி அரைத்து வைத்திருக்கும் மசாலாவைப் போடவும்.
- பிறகு தக்காளி, வெங்காய விழுதைச் சேர்க்கவும்.
- இதில் கறியை போட்டு தேவைப்பட்டால் மிளகாய் பொடியை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி தண்ணீரை ஊற்றி விட்டு அடுப்பில் மிதமான நெருப்பில் அரை மணி நேரம் வேக வைக்கவும்.
- தேங்காயை மைய அரைத்து கறி வெந்ததும் சேர்த்து இறக்கவும்.
(2 votes)







