தேவையான பொருட்கள்
வெங்காயம்(பெரியது)-1
தக்காளி(மீடியம் சைஸ்)-4
பச்சைமிளகாய்-4
காய்ந்தமிளகாய்-2
புதினா-7இலைகள்
தனியா-1ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/4ஸ்பூன்
மல்லித்தூள்-1/2ஸ்பூன்
சர்க்கரை-1/2ஸ்பூன்
எண்ணெய்-சிறிது
உப்பு
செய்முறை
வெங்காயம்,மிளகாய்,தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
மிக்ஸியில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் போட்டு, நாலைந்து முறை பல்ஸ்-ல் அரைக்கவும். இறுதியாக எண்ணெய் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
ஸ்பைஸி சால்ஸா ரெடி..சிப்ஸ்,கட்லட்,போண்டா,பஜ்ஜி இவற்றுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.
இதிலே காய்ந்த மிளகாயை தவிர்த்து, காரத்துகேற்ப பச்சை மிளகாயை சேர்த்து,அத்துடன் நாலைந்து ஸ்பினாச் இலைகளையும் சேர்த்து அரைத்தெடுத்தால் க்ரீன் சால்ஸா தயார்.
வெங்காயம்,தக்காளி,மிளகாயை முடிந்தளவு பொடியாக நறுக்கவேண்டும்.அரைத்தெடுக்கும்போது எல்லாப்பொருட்களும் ஒன்றும்-பாதியுமாக மட்டுமே அரைபட்டிருக்கவேண்டும்..இல்லையெனில் சால்ஸா சட்னி ஆகிவிடும்! 
நன்றி : Welcome to Mahi's Space...






கருத்துகள்
(No subject)
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
நன்றி
நன்றி
Very Nice...
Very Nice...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
நன்றி
நன்றி