VISWAM's படம்

தேவையான பொருட்கள்: 

எப்பவும் ஒரே மாதிரி சமையல் போரடிக்கும்.
கொஞ்சம் வித்யாசமா செய்யலாம்னு நினைக்கறவங்க
இதை செஞ்சு பாக்கலாம்.

உடம்பு சரியில்லாம, வயிறு சரியில்லாம இருக்கறப்ப
கூட இந்த கிச்சடியை சாப்பிடலாம்.

நம்ம வெண்பொங்கலுக்கு தங்கச்சி மாதிரி:)
அதே அரிசி, அதே பாசிப்பருப்பு , கூட கொஞ்சம்
காய்கறிகள் Smile)

தேவையான சாமான்கள்:

1 கப் அரிசி
1 கப் பாசிப் பருப்பு
1 கப் காய்கறிகள் (காரட், பீன்ஸ், பட்டாணி எல்லாம் கலவையாக)

1 பெரிய வெங்காயம் நீள் வாக்கில் அறிந்தது

2 சின்ன தக்காளி நீள வாக்கில் அறிந்தது.

தாளிக்க சீரகம் கறிவேப்பிலை

நெய் 1 ஸ்பூன்

கரம் மசாலா, சீரகத்தூள், தனியா தூள், - தலா 1 ஸ்பூன்

உப்பு, மஞ்சள் தேவையான அளவு.

செய்முறை:

குக்கரை அடுப்பில் வைத்து நெய் போடவும்
நெய் உருகியதும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து
வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி
சேர்க்கவும்.

காய்கறிகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கியதும்
மசாலா, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி
வைத்திருக்கும் அரிசி, பருப்பையும் சேர்த்து
தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 விசில்
விட்டு இறக்கி வைக்கவும்.

ஸ்டீம் போனதும் குக்கரைத் திறந்தால் கம கம கிச்சடி ரெடி.

கொத்துமல்லித் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

தொட்டுக்கொள்ள எதுவும் தேவையிராது. விரும்பினால்
தயிர் தொட்டுக்கொள்ளலாம். இல்லையேல் ஊறுகாய் நல்ல
காம்பினேஷன். சுட்ட அப்பளம் மேலும் சுவை சேர்க்கும்.

இது வயதானவர்கள், சின்னக்குழந்தை அனைவருக்கும்
இதமான உணவு.

பிள்ளைகளுக்கு லஞ்சுக்கும் அனுப்பலாம். காய்கறிகள்,
பருப்பு, அரிசி என தேவையான அனைத்துச் சத்துக்களும்
கிடைக்கிறது.

மசாலா விரும்பாதவர்கள் சாம்பார் பொடி போட்டும் செய்யலாம்.
அதுவும் வேண்டாம்னு மாறுதலா வேணும்னா
தாளிக்கும்போது பச்சைமிளகாய் சேர்த்துக்கலாம்.

நன்றி : புதுகைத் தென்றல்

0
Your rating: None

கருத்துகள்

ragini's படம்

இதுக்கு பேரு


இதுக்கு பேரு கிச்சடியா

வெள்ளரிக்கா, தயிர் போட்டு செய்யுற கூட்டு தான் கிச்சடி அப்படி சொல்லுவோம்,

VISWAM's படம்

தாங்கள் சொல்வது பச்சடி.


தாங்கள் சொல்வது பச்சடி. விருந்து சமயத்தில் பாயாசமுடன் பரிமாறுவ. வெஜிடபில் பிரியாணியுடன் தயிறில் வெங்கயமுடன் பச்ச்டி செய்து பரிமாருவதும் பச்சடி. இது கிச்சடி.

vinoth's படம்

இங்கே பச்சடி கிச்சடி இரண்டுமே


இங்கே
பச்சடி கிச்சடி இரண்டுமே வெள்ளரிக்கா போட்டு செய்யுற கூட்டுதான்,
அரிசி சேர்க்கிறது ஆச்சரியமா இருக்கு.

இதுக்கு வேற பேரு இருக்கா?


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


VISWAM's படம்

தெரியவில்லையே? நன்றி.


தெரியவில்லையே? நன்றி.