தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் - 15
கடலை மாவு - 100 கிராம்
சோளமாவு - 1 தேக்கரண்டி
அரிசிமாவு - 1 தேக்கரண்டி
மைதா - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:
காளானை சுத்தம் செய்து கொள்ளவும்.
எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து எண்ணையில் பொரித்து எடுக்க சுவையான பஜ்ஜி ரெடி.



