VISWAM's படம்

தேவையான பொருட்கள்: 

இந்த முட்டை கோஸை பார்த்தாலே குழந்தைகளுக்கு
பிடிக்க மாட்டேன்கிறது....உடம்புக்கு நல்லது பலருக்கு
பிடிப்பதில்லை!குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி இந்த
முட்டைகோஸ் ஆம்லேட் செய்வதை பாப்போம்.!!!

தேவை
நைசாக நறுக்கிய கோஸ் ஒரு கப்

நைசாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சிறிது

கருவேப்பிலை ,கொத்தமல்லி நறுக்கியது சிறிது

உப்பு சுவைக்கு ஏற்ப

கடலை மாவு மூன்று கப்

செய்முறை
கடலை மாவை சலித்து சிறிது சோடா மாவு சேர்த்து
தண்ணீர் சேர்த்து , நறுக்கிய கோஸ் வெங்காயம்,பச்சை
மிளகாய் கருவேப்பிலை,கொத்தமல்லி ,உப்பு சேர்த்து
நன்றாக கலக்கி தோசை மாவு பதத்தில் கரைத்து ,பத்து
நிமிடம் ஊற வைத்து ,தோசை கல்லை சூடாக்கி சிறிது
நெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி வட்டமாக
தேய்த்து சிறிது என்னை சுற்றிலும் விட்டு, வேக
வைக்கவும். பிறகு திருப்பி போட்டு பொன்னிறமாக
சுட்டு எடுக்கவும்.மாலை நேரம் டிபன் ஆக பசியுடன்
வரும் குழந்தைகளுக்கு சத்தான ஆம்லெட் சூடா ரெடி !

சுவையான ஆம்லேட் தயார்.குழந்தை களிடம் முட்டை கோஸ்
ஆம்லேட் என்று சொல்லாதீர்கள்!!

நன்றி : Geetha's Womens Special

3
Your rating: None Average: 3 (1 vote)

கருத்துகள்

Indhurag's படம்

ithu unga own preparation or


3

ithu unga own preparation or copy paste panneengala.
receipe nalla irukku
eve tiffin

VISWAM's படம்

மிக்க நன்றி. நான் பதிவிடும்


மிக்க நன்றி. நான் பதிவிடும் பதிப்புகள் யாவும் நான் ரசித்தவைகள்தான். நல்ல சுலபமான சமையல் குறிப்புகளையும் எடுத்துதான் அதாவது காப்பி பேஸ்ட் தான் செய்கிறேன். பதிவின் கீழே நன்றி தெரிவித்துள்ளேனே?

Indhurag's படம்

kkkkkkkkkkkkkkkkkkkk


3

kkkkkkkkkkkkkkkkkkkk

VISWAM's படம்

நன்றி


நன்றி