அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதற்கான காரணம் என்ன
கருத்துகள்
மக்களின் தேவை அதிகரிப்பு
மக்களின் தேவை அதிகரிப்பு
அனிதா,BGDCA
எப்படிச்சொல்றீங்க
எப்படிச்சொல்றீங்க
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
மக்கள்தொகைப் பெருக்கமும்
மக்கள்தொகைப் பெருக்கமும் பொருட்களை பதுக்குதலும்.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
உணவு தானிய உற்பத்தி குறைவு
உணவு தானிய உற்பத்தி குறைவு மட்
டுமல்ல மக்களின் வாங்கும் தன்மை அதிகரித்திருக்கிறது.
தமிழ் நண்பர்களில் ஈஷ்வர்
தமிழ் நண்பர்களில் ஈஷ்வர் அவர்கள் கூறிய கருத்து........
=====================
பொதுவாக உணவுப்பொருள்களின் விலையேற்றத்தை பற்றி ஆராயும் போது, மக்கள் அதிகம் பயன்படுத்தும் அல்லது அதற்கு மாற்று அல்லாத பொருட்களின் விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் உதாரணமாக சர்க்கரை.
அடுத்தபடியாக ஒரு பொருளுக்கு பதிலாக பயன்படுத்த முடிகின்றவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் துவரைக்குப்பதில், தட்டை,பாசிப்பயறு போன்றவைகள்..
மாற்று உணவுப்பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும், அரிசியை அடிப்படையாகக் கொண்டு எத்தனை உணவு வகைகள், சோறு,இட்லி,தோசை, ஆப்பம்,பிட்டு, இன்னும்
எத்தனையோ அரிசியுடன், கோதுமை ,கேல்வரகு,போன்றவைகளை சேர்த்துவரலாம்.
விவசாயிகளும் தங்களுக்குள் அனுசரித்து பயிர்செய்ய வேண்டும், தக்காளி விலை போகிறது எனில் ஒட்டுமொத்தமாக எல்லோரும் தக்காளியையே பயிரிடுவது போல் இல்லாமல் பரவலாக தேவையான வற்றை பயிர்செய்ய முன்வரவேண்டும்.
பயிர் விளைச்சளைக் கண்காணித்து பதுக்களை தவிர்பதை அரசாங்கம் தனியாக செயல்படுத்த வேண்டும்,
நீண்டநாள் வைக்கக்கூடிய களஞ்சியத்தில் பதப்படுத்தக்கூடிய வற்றை
முறைப்படுத்த வேண்டும், தனக்குமிஞ்சியதை தானமாகத் தரளாம் ஒரு ஆண்டு அதிகம் உற்பத்தியானதால் சர்க்கரையை ஏற்றுமதி செய்துவிட்டு விழிபிதுங்கி நிற்கலாமா?
உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையாத வரை, ஆயிரம் அணுகுண்டுகள் ஏவுகணைகள், ராக்கெட் தொழில் நுட்பம் கொண்டாலும் வல்லரசு என்பது கனவுதான்.
"தள்ளா விளையுள்ளும் தக்காரும் தாழ்வுஇலாச்
செல்வரும் சேர்வது நாடு"
"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு"
அரசு(அரசியல்வாதிகள் ),குடிமக்கள், உழவர்கள் யாவரும் விலைவாசிக்கு காரணம்
அவர்கள் நினைப்பின் விலையேற்றம் என்ற செல்லின் பொருள் பற்றிய சிந்தனையே வாராது.
இதில் அரசியல் வாதிகள் நம்நாட்டைப்பீடித்த வியாதிகள் என்ற நிலை கண்கூடு.
மக்கள் சுயநலமாக இருந்து பழக்கப்பட்டு விட்டனர், அரசாங்க வேலையில் இருப்பவர்கள் நாட்டின் மக்கட்தொகையில் எத்துனைபேர்?
அவர்களுக்கு சம்பளம் உயர்த்தி விட்டால் போதுமா?
அதிலும் அதிக சம்பளம் வாங்கும் மத்திய அரசு உழியர்களுக்கு சி.எஸ்.டி
கேன்டின்கள் வேறு இயங்குகின்றன்(வரிச்சலுகைவேறு). தனியார்த்துறையில் கைநிறைய சம்பாதிப்பவர்களுக்கு விலையேற்றம் ஒரு செய்தி மட்டுமே
அவர்களுக்கு கவலைஇல்லை,
கவலைப்படுபவர்களும் நசுங்கிப்போவோரும் ஏழைநடுத்தர பாமரர்களே
அதிலும் முன்னுக்கும் போகமுடியாமல் பின்னுக்கும் போகமுடியாது
கௌரவம் பகட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு அல்லாடுபவர்கள் எப்போதும் நடுத்தரத்தினர் தான்.
அவர்கள் களத்தில் இறங்கிப்போராட சக்தியற்றவர்கள்,
வேறுமனே செய்தித்தாள்களில் விலைவாசிப்போராட்டங்கள்ப்பற்றி படிப்பதோடு
சரி.......
இதில் யாரை குறிவைத்து மொத்தமாக பழியை சுமத்த முடியும்........
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...







