தமிழன் தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்திற்கு மற்ற மாநிலங்களை கையேந்தி நிற்குமளவிற்கு ஆளாகியுள்ளானா, ஆளாக்கப்பட்டுள்ளானா என்பது முல்லைப் பெரியாறு,காவிரி, கிருஷ்னா நதி நீர் போன்றவைகள் பலக் கேள்விகளை எமக்குள் தோற்றுவிப்பதனால் எமது மக்களின் எண்ணம் எதை பிரதிபலிக்கின்றது?
இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தீர்வாக எல்லா இனங்களும் மதங்களும் நிலப்பகுதி மேம்படுத்தல், கல்வி, தொழில் எல்லாவற்றிலும் சமவுரிமை பேணுவதோடு; அவ்வப்பகுதி மக்களே அவ்வப்பகுதியை ஆளும் உரிமையைக் கொண்டிருத்தல் என்பன உள்ளடக்கியதாக ஒரு தீர்வு இருப்பின் ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் மகிழ்வாக இருக்கலாமே!