Choices


கருத்துகள்

vinoth's படம்

எனது வாக்கு தீவிரவாத


எனது வாக்கு

தீவிரவாத ஒழிப்பு
லஞ்ச ஒழிப்பு

இவற்றிற்குத்தான்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


raaamu's படம்

கல்வி அறிவு என்பதை என்னால்


கல்வி அறிவு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஏனென்றால் படித்தவன்தான் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்கிறான். லஞ்சம் தலைவிரித்து ஆட முக்கிய காரணமே படித்து அதிகாரத்தில் இருப்பவர்கள்தான். அதனால் வரும் அதிருப்தியினால் தீவிரவாதம் தலைவிரிக்க காரணம் ஆகிறது. எனவே முதலில் ஒழிக்க வேண்டியது லஞ்சம் தான் . நட்புடன் ராம்

vinoth's படம்

தமிழ் நண்பர்களில் வந்த


தமிழ் நண்பர்களில் வந்த கருத்து

ஹாஜாமுகைதீன்:

பல்வேறு மதம் இனம் மொழி மாநிலங்கள் என்று பலதரப்பட்ட மக்கள் வாழும் இந்தியாவில் அன்று நம்மை ஒன்றிணைத்தது ஆன்மிக உணர்வு தான்.

தப்பு செஞ்சா சாமி கண்ண குத்திடும் என்று தெரிவிக்கப்பட்டு வளர்நத குழந்தைகள் பெரியவனான பின்பு எவ்வளவுகஷ்டம் வந்த போதிலும் கடவுள் கண்ணைத்திறக்கும் வரை காத்திருப்போம் என்று இருந்தார்களே தவிர லஞச்ம் வாங்கி பணக்காரனாக மாறவோ - தீவிரவாதத்தை கையிலெடுக்கவோ துணியவில்லை. கல்வியறிவின்றி கைநாட்டாக இருந்த போதிலும் வேலையின்றி கிடைத்த வேலையை செய்த போதிலும் நம் மூதாதையர் சந்தோஷமாகவே வாழ்நதிருக்கிறார்கள.

இருட்டில் தப்பு செய்தாலும் கடவுளுக்கு அது தெரியும் என்று நன்மை செய்து வாழ்ந்த வாழ்க்கை இன்று கடவுள் இருப்பது உண்மையில்லை என்று எப்போது பகுத்தறிவுப் பகலவன்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினார்களோ அன்று இந்தியர்களின் ஆன்மிக உணர்வு போய்விட்டது. மனசாட்சியை அடகு வைத்து த்ப்புக்கு நியாயம் கற்பிக்கப்படுகின்றது. யாரும் பார்க்காமல் தப்பு செய்வது சரிதான் என்று சொல்லப்படுகின்றது. நாலுபேருக்கு நல்லது செய்தால் தப்பு தப்பேயில்லை என்று சொல்லப்படுகின்றது. Dலஞச்ம் அன்பளிப்பாகிவிட்டது. காசு வாங்காமல் ”நட்புக்காக” சுகம் கொடுத்தால் அது விபச்சாரம் இல்லை என்றாகிவிட்டது. தானும் தன் குடும்பமும் சுகிக்க நாட்டைக் கூறு போட்டாலும் பரவாயில்லை என்று தேசப்பற்று ஆகிவிட்டது.

நம் அலுவலகத்தில் நம் மேலதிகாரி நம்மை கவனிக்கவில்லை என்று தெரிந்தால் நாம் என்ன ஆட்டம் ஆடுவோமோ அதைவிட் பல மடங்கு கடவுள் இல்லை என்று சொல்லி உலகில் ஆடிக்கொண்டிருக்கிறோம்.

இன்று கல்வியறிவு இருந்தும் –நிறைந்த வேலைவாய்ப்பு இருந்தும் – படைபல்ம் – பாதுகாப்பு – தொழில்நுட்பம் – பிற நாடுகள் நம் மீது வைத்திருக்கும் மதிப்பு இவை இருந்தும் நாம் இன்னும் முன்னேறவில்லை என்று நம் மனசாட்சி நம்மை உறுத்துவதற்கு காரணம் – ஆன்மிக உணர்வு இல்லாத்து தான்.

இன்று கோயில்களிலும் பள்ளிவாசலிலும் சர்ச்சிலும் கூட்டம் குறையவில்லை. இதை வைத்து ஆன்மிக உணர்வு வளர்ந்துவிட்டது என்று சொல்லமுடியாது. நாம் விரும்புவதையே நம் சகோதரனுக்கும் விரும்பாதவரை ஆன்மிக உணர்வும் வராது. பணம் படை தொழில்நுட்பம் இவற்றில் புலிப்பாய்ச்சல் இருந்தாலும் இந்தியா உட்பட எந்த நாடும் முன்னேறாது. நிறைவும் கிடைக்காது.

--
ஹாஜாமுகைதீன்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


vinoth's படம்

தமிழ் நண்பர்களில்


தமிழ் நண்பர்களில் ஈஸ்வர்:

லஞ்சம் ஒழிய வேண்டும்,
கல்வியறிவு பெருக வேண்டும்,
கல்வி சமுதாய உணர்வை ஊட்டும்படியும், தனிமனித ஒழுக்கத்தை புகட்டுவதாகவும், மாறவேண்டும், இன்று பணம் ஈட்டும் நோக்கில் மட்டுமே கல்வி பயிலப்படுகிறது...

அடுத்து நல்ல அரசியல் தலைவர்கள் தேவை, (நம்நாட்டில் அரசியல் தலைவர்கள் எங்கிருந்து உருவாகிறார்கள் ஆராய்ந்து பாருங்கள் பொருளாதார பலமும், சிந்திக்காத ரசிகர் கூட்டமும், ஜாதி வெறியும்-பலமும் உள்ளவர்களைத் தவிர இன்றைய தேதியில் யார் தலாவராக முடிகிறது

அரசியலை விமர்சிக்கும் எந்த எழுத்தாளனும் சிந்தனையாளனும் களத்தில் இறங்குவதில்லையே ஏன்?...
மக்கள் கூட்டம் ஆட்டுமந்தைகளாக இருக்கக்காரணம் என்ன?
சமுதாய சிந்தனையும் மக்களின் நலன் நாடும் நல்ல தலைவர்கள் இல்லாது போனதேன்?...)

மக்கள் மனம் மாற வேண்டும்..(தன்வீடு தான்னுண்டு என்னும் சுய நலத்தில் தனிப்பட்டிருக்கும் நாம், நம் நாட்டுச்சட்டங்களை தப்பிப்பதற்காக பயன்படுத்தும் நிலை மாற வேண்டும்,
உரிமை கேட்டு போராடும் போது நமக்கு உரிமையில்லாத பொதுசொத்தை தீயிடல், வேலை நிறுத்தம் கூட கண்டிக்கத்தக்கதே...)
அரசியல் அமைபிலும் மாறுதல் தேவை. ஆயிரத்து ஒரு வாக்கு பெற்றதால் ஆயிரம் வாக்குப் பெற்ற, ஆயிரம் பேரின் அபிமானத்திற்குப் பாத்திரமான ஒருவரை தோல்வி யுற்றவர் எனும் முறைமாறி விகிதாசார முறை வரவேண்டும்..

வறுமையை ஒழிக்க வேலை வாய்பை பெருக்க அடுத்தத்தலைமுறை கால்நீட்டிப்படுக்க காட்டாய குடும்பக்கட்டுப் பாட்டுத்திட்டமும் வேண்டும்........

நீர் ஆதாரங்களை பாதுகாப்புத்துறையிடம் அளிக்க வேண்டும், (நதிகள் தேசியமயமாகியும் நாம் கண்ட பலன்தான் உலகிற்கே தெரியுமே )............

--
ஈஸ்வர்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...