ஆங்கிலப் புத்தாண்டு ஓடிமறையுமுன் இப்படியொரு கேள்வியைப் போட்டதிற்கு மன்னிக்கவும். ஆண்டின் முதலாம் நாள் தைப்பொங்கல் என்பதால் புத்தாண்டென்பதா? சோதிடக் கணிப்பின் படி கோள்களின் சுற்றுத் தொடங்கும் நாள் சித்திரைப் பிறப்பு என்பதால் புத்தாண்டென்பதா? இது பற்றி எனக்குப் போதிய அறிவில்லை. அதனால், இதற்கான பதிலையும் விளக்கமளிக்கும் பணியையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
கருத்துகள்
ஐயா வணக்கம். தமிழ் வருட
ஐயா வணக்கம்.
தமிழ் வருட தொடக்கம் என்பது தமிழ் அறிஞர்களால் மிகவும் ஆராயப்பட்டு மறை மலை அடிகளார் மற்றும் சூரிய நாராயண சாஸ்திரி எனப்படும் பரிதிமாற் கலைஞர் அவர்கள் போன்ற பெரியோர்கள் தமிழ் வருடப்பிறப்பு பிறப்பு என்பது தை மாதம் முதல் தேதி என்று அறிவித்தார்கள். அதனை தி.மு.க அரசு 2010 ஆண்டு தை மாதம் முதல் தேதி தமிழ் புத்தாண்டு என்று அறிவித்தார்கள்.சித்திரை வருடப்பிறப்பு என்பது ஆரியம் அமைத்தது, அது தமிழ் வருடப்பிறப்பு அல்ல என்பது தான் உண்மை. தமிழ் இலக்கியங்களில் நல்ல நாள் கெட்ட நாள் என்று ஜாதக முறை ஒன்றும் இல்லை. ஜாதகம் முறை என்பது முதல் இடை கடை சங்ககாலத்தில் ஒன்றும் குறிப்பிடவில்லை. எனவே தை முதல் நாள் என்பது தமிழ் வருடப்பிறப்பு என்பது என் கருத்து.
அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்
வணக்கம் நண்பா,
வணக்கம் நண்பா,
மீண்டும் உங்களுடன் உரையாடுவதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மையே. ஆனால் ஆரியம் நம்முடன் நகமும் சதையும் போல உள்ளது. நாம் (மன்னராட்சியில்) நமது வெற்றி தோல்விகளை அவர்களின் ஜோதிட முறைகளை கொண்டே அமைந்திள்ளது. மேலும் நமது வாழ்க்கை உதாரணங்கள் மஹாபாரத்தையும் ராமாயணத்தையும் கொண்டுள்ளது. இதிலிருந்து நம்மவர்களை பிரிக்கவேண்டுமேனில் நமது குழந்தைகளிடம், இளையோரிடம் நமது மொழியின் பற்றிணை, வரலாற்றை எடுத்து கூறுதல் மூலமே ஆரியதை நாம் நீக்க முடியும். உலகத்திலேயே ஈழதமிழர்கள் மட்டுமே இப்பொது தூய தமிழை பேசுகிண்றனர். மற்றவர்களெல்லாம் தமிழை அதன் இயல்பிலிருந்து மாற்றுகிண்றனர். தமிழ்நாட்டில் இப்போது ஆங்கிலம் இல்லா தமிழை கேட்கவே முடியாது. இதனை மாற்ற நமது அடுத்த தலைமுறையாலே மட்டுமே முடியும். இதன் மூலமெ நமது மொழியின் தனித்தன்மைகளை நாம் மீட்க முடியும் என்பது எனது தாழ்மையான கருது.
அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்
தமிழ் நாட்டை தமிழ் மன்னவர்கள்
தமிழ் நாட்டை தமிழ் மன்னவர்கள் ஆட்சி செய்யும்போது செய்தவரை தமிழ் ஏறத்தாழ தூயதமிழ்தான் இருந்திருக்கவேண்டும். கி.பி 1500அதன் பின்பு வந்த மன்னர்கள் சரியான நிலைப்பு தன்மை இல்லாததால் நமது தனிதன்மையை இழந்துவிட்டோம். அன்றிலிருந்து நாம் இன்னும் மீள முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆங்கிலேயர்களுக்குப் பின் நாம் ஆரியர்களுக்கு அடிமையானோம்.ஒற்றுமையாக இருந்த நாம் இப்பொழுது மொழிவாரியான மக்களாக இருக்கிறொம். நம்மை ஒன்று சேராமல் இருக்க நமக்குள் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா)பிரச்சனையை உண்டு பண்ணுகிறார்கள். இதன் விளைவாகத்தான் ஈழப்பிரச்சனையில் நாங்கள் கண்ணீர் மட்டுமே சொரியமுடிந்தது. இப்பொழுது இந்தியா என்ற வட்டத்தில் நாம் எப்படி வெற்றிபெறப்போகிறொம் என்றுதான் தெரியவில்லை.
அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்
நமது தாய் வீடு என்பது
நமது தாய் வீடு என்பது தமிழ்நாடுதான். எனது எண்ணமென்பது நமக்குள் ஒற்றுமையில்லாமல் இருக்கிறோம் என்பது தான். தமிழன் இப்பொழுது சுயநலவாதியாய் இருக்கிறான். இவர்களை ஒன்று சேர்க்கலாம் என்றால் இவர்கள் சாதி என்னும் மாயவலையில் இருக்கின்றனர். இங்குள்ளவர்கள் சாதி அரசியல் செய்கிறார்கள் தவிற தமிழ் மக்கள் என்ற சிந்தனை செய்வதில்லை. இதற்கு குழந்தைகளிடத்தில் நமது மொழி நிலையை விளக்கி அவர்கள் மூலமே இதனை மாற்றவேண்டும். எ.கா.ஈழ போராட்டத்தில் கருணா காட்டிக்கொடுக்காவிட்டால் நமது போராளி தோற்றிறுப்பாரா? நமது மொழி வளர்ச்சி இனிவரும் காலங்களில் வீழ்ச்சியடைமால் இருக்க நமது இளையோர் மற்றும் வரும் சந்ததியின் கையில்தான் இருக்கு. இன்று நகரத்தில் உள்ள மக்கள் தனது மக்கள் ஆங்கில அறிவிருந்தால் போதுமென்று ஆங்கில கல்வியைக்கொடுக்கிண்றனர்.இந்த நிலை மாற நமது அரசு தமிழ் வழிக்கல்விக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.இதனை எந்தவித மாற்றமில்லாமல் அதனை தொடர்ந்து வரும் அரசு செயல்படுத்தவெண்டும். தமிழ்நாட்டில் இப்பொழுது நடைபெறுவது போலில்லாமல் (தி.மு.க மற்றும் அ.தி.மு.க சண்டை) தொடரவெண்டும். உங்களை (யாழ்பாவாணன்) போன்றோர்கள் கணனியில் தமிழ் மொழி உலா வர முயற்சி செய்தல் வெண்டும். அழகி என்ற மென் பொருள் தயாரித்த நண்பர் ( பெயர் தெரியவில்லை மன்னிக்கவும் ) போல முயற்சி செய்தல் வெண்டும்.
அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்
வனக்கம் நண்பர்களே.
வனக்கம் நண்பர்களே.
அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்தாண்டு உங்கள் கனவுகள் மெய்பட நான் இறைவனனிடம் வேண்டுகிறேன்.என்றும்
அன்புடன் நான்
செல்வா
அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்
சித்திரையை புத்தாண்டு என்பதை
சித்திரையை புத்தாண்டு என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுகிறார் தொல்லியல் ஆராய்ச்சியாளர் எஸ். ராமச்சந்திரன் அவர்கள்.
சித்திரையில்தான் புத்தாண்டு - எஸ். ராமச்சந்திரன் தொல்லியல் ஆராய்ச்சியாளர்
URI: http://tamilnanbargal.com/node/32824
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...










