கருத்துகள்
தமிழ் நண்பர்களில்
தமிழ் நண்பர்களில் jse.இரமேஷ்:
கூட்டணியை நம்பி பிரயோஜனம் இல்லை...விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, இலவச
மின்சாரம் (?!), கலர் டி.வி, 108 ஆம்புலன்ஸ் சேவை, 1 ரூபாய் அரிசி என இலவசத்
திட்டங்களை மக்கள் நியாபகம் வச்சிருந்தாங்கனா தி.மு.க ஜெயிக்கும். இலவசத்தால்
ஏற்படும் விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டாலோ, கடந்த 2
வருசமா தமிழ்நாட்டுல நடந்த கூத்தை மக்கள் நியாபகம் வச்சிருந்தாலோ, இன்னும்
இரண்டு போட்டி மாநாடுகள் நடத்தினாலோ, எதிர்கச்சித் தலைவி ஓய்வு எடுக்காமல்
கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தாலோ தி.மு.க வருவதற்கு வாய்ப்புகள் கண்டிப்பாக
இல்லை...
மறதிதான் சிறந்த மருந்துன்னு நம்ம கூகிள் குழுமத் தலைவர் கந்தவேலர் சொன்னபடி,
எதையாவது ஒன்றை மறந்தால் எதாவது ஒன்னு நடக்கும்ங்கிறது என்னோட கணிப்பு...ஆனா
அழகிரி ஃபார்முலாவை ஒரே நேரத்தில் எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்த
முடியாதிங்கிறது என்னோட கருத்து. உதாரணம் எங்க தென்காசி தொகுதி.
--
jse.இரமேஷ்:
தமிழ் நண்பர்கள்
தமிழ் நண்பர்களில்
தமிழ் நண்பர்களில் கவிதா:
நீங்க சொன்ன எல்லா ஐடியாவுமே திமுக வெற்றிபெற உதவும். இதையெல்லாம் பண்ணாலே
கண்டிப்பா அடுத்த தடவையும் திமுக தான் வெற்றி பெறும்.
--
கவிதா
தமிழ் நண்பர்கள்
தமிழ் நண்பர்களில்
தமிழ் நண்பர்களில் வினோத்:
2010/9/16 jse ramesh
> கூட்டணியை நம்பி பிரயோஜனம் இல்லை...
ரொம்ப சரியாச்சொன்னீங்க பாஸ்.
ஆனா எனக்கு என்ன தோணுதுன்னா, பணம், இலவசம் எல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.
ஆட்சி அவங்க கையில இருக்கிற வரைக்கும் எதுவும் பண்ணமுடியாது. ஓட்டு
இந்திரங்களில் நாம தட்டுறது எல்லாம் சும்மான்னே தோணுது.
யாருக்கு எத்தனை ஓட்டு வேணும்னு கூட கணினியால தீர்மானிக்க வைக்கலாம்னு
நினைக்கிறேன்.
இந்த சந்தேகம் வராம இருக்கணும்னா எதிர் கட்சிக்காரங்களையும் சில பேரை ஜெயிக்க
வைக்கணும், கொஞ்சம் பணம் செலவழிக்கணும்.
கணினி பொய் சொல்லாது. என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதை அப்படியே சொல்லும். கடந்த
முறை சிதம்பரம் மறு எண்ணிக்கையில் ஜெயிச்சதே இதற்கு சாட்சி.
--
வினோத் கன்னியாகுமரி
தமிழ் நண்பர்கள்
தமிழ் நண்பர்களில்
தமிழ் நண்பர்களில் jse.இரமேஷ்:
மின்னணு இயந்திரத்தில் பல குழறுபடிகள் (ஸ்பெல் கரெக்ட்டா??) இருக்கிறது என பல
விமர்சனங்கள் இருந்தாலும், அதை இதுவரை யாரும் சரியாக நிருபிக்கவில்லை அல்லது
நிருபிக்க சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை...
ஆனால் தேர்தல் கமிசன் மீது எனக்கு சில கோபம் இருக்கிறது,
1. மிண்ணனு வாக்கு இயந்திரத்தில் தவறு செய்ய முடியும் என்று நிருபித்தவர்மீது
பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளியது.
2. 153 இயந்திரத்தை திருட்டுக் கொடுத்தது.
3. அனைத்து இயந்திரத்திற்கும் ஒரே கடவுச்சொல்லை வைத்திருப்பது. அதாவது ஒரு
இயந்திரத்தை திருடி, அதன் கடவுச் சொல்லை கண்டுபிடித்திவிட்டால் அனைத்து
இயந்திரத்தையும் நம்மால் இயக்க முடியும் என சில நாட்களுக்குமுன் படித்ததாக
ஞாபகம்.
4. 40% இயந்திரங்கள் இன்னும் பழைய தொழில்நுட்பத்துடனே இருப்பது. அதாவது
அவைகளில் உள்ள பழைய குறைகள் இன்னும் அகற்றப்படவில்லை...
இயந்திரத்தில் உள்ளப் பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, சிதம்பரம் ஜெயித்ததை ஒரு
பாமரனால்கூட ஒத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் காலைமுதல் நான் வாக்கெண்ணிக்கை
கணக்கெடுப்பை பார்த்துக்கொண்டிருந்தேன்...இது ஜனநாயகத்தின் பச்சைத் துரோகம்,
தேர்தல் கமிசனின் மிகக் கேவலமான விளக்குப் பிடிக்கும் வேலை...இதைவிட என்னால்
அநாகரீகமாக திட்ட முடியாது.
அதேபோல வைகோவின் தொகுதி கணக்கெடுப்பிலும் பயங்கரமான ஏற்றம் இரக்கம்
காணப்பட்டது.
தி.மு.க தோற்பதில் பெரிய நஷ்ட்டமோ அல்லது அ.தி.மு.க ஜெயிப்பதில் பெரிய லாபமோ
இல்லை. ஒருவேளை அ.தி.மு.க ஜெயித்தால் கழக குடும்பம் சேர்த்த சொத்துக்கள்
வெளிவரலாம் (அவர்களை தெருவுக்கு கொண்டுவந்துவிட்டுதான் வேற வேலையை பார்ப்பார்
இந்த அம்மையார்)...அரசு அதிகாரிகள் கொஞ்சம் பயபக்தியுடன் வேலை
பார்க்கலாம்...எங்கும் நிறைந்திருக்கும் ஊழல் ஓரளவுக்கு குறைந்து பெரிய
தலைவர்கள் மட்டும் ஊழல் புரியலாம்...மக்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும்
தேவையில்லாத போராட்டம் குறையலாம்...அவ்ளோதான்.
2010/9/16 வினோத்-VINOTH
> ஆனா எனக்கு என்ன தோணுதுன்னா, பணம், இலவசம் எல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.
--
jse. இரமேஷ்
தமிழ் நண்பர்கள்
தமிழ் நண்பர்களில்
தமிழ் நண்பர்களில் வினோத்:
2010/9/16 jse ramesh
> 1. மிண்ணனு வாக்கு இயந்திரத்தில் தவறு செய்ய முடியும் என்று நிருபித்தவர்மீது
> பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளியது.
இது ஒன்றே அவர்கள் தவறை வெளிச்சம் போட்டுக்காட்ட போதுமானது. இத்தடவை பழைய
தவறுகளை யாரும் கண்டுபிடிக்காத அளவுக்கு முயற்சிகள் நடத்தப்படலாம். எதிர்
கட்சிகள் விழிப்புடன் இருந்தாலும் கண்டுபிடிக்க முடியுமா என சந்தேகம் தான்.
அங்கே பணிபுரியும் ஏதாவது கணினி வல்லுநர் நாட்டின் மீது பற்று வந்து வெளிச்சம்
போட்டுக்காட்டினால் தான் உலகுக்குத்தெரியவரும்.
> ஒருவேளை அ.தி.மு.க ஜெயித்தால் கழக குடும்பம் சேர்த்த சொத்துக்கள் வெளிவரலாம்
> (அவர்களை தெருவுக்கு கொண்டுவந்துவிட்டுதான் வேற வேலையை பார்ப்பார் இந்த
> அம்மையார்)...அரசு அதிகாரிகள் கொஞ்சம் பயபக்தியுடன் வேலை பார்க்கலாம்...எங்கும்
> நிறைந்திருக்கும் ஊழல் ஓரளவுக்கு குறைந்து பெரிய தலைவர்கள் மட்டும் ஊழல்
> புரியலாம்...மக்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் தேவையில்லாத போராட்டம்
> குறையலாம்...அவ்ளோதான்.
இப்போதைய நிலைக்கு இதுவே பெரிய விஷயம் என நினைக்கிறேன்.
--
வினோத் கன்னியாகுமரி
தமிழ் நண்பர்கள்
தமிழ் நண்பர்களில்
தமிழ் நண்பர்களில் Jse.இரமேஷ்:
பெரிய விசயம்தான்...ஆனா தாத்தாவோட கிரிமினல் மைண்ட் சாரி சாணக்கிய மைண்ட் என்ன
கணக்கு போட்டு வச்சிருக்குன்னு யாருக்கும் தெரியாது. எனக்குத் தெரிந்தவரை,
தி.மு.க கடந்த முறையைவிட அதிகளவு இலவசங்களை அறிவிக்கலாம்....அந்த மகுடிக்கு
இங்கே படமெடுத்து ஆடுபவர்கள் அதிகம்...கூட்டணி ஆட்சிக்கு ஒருவேளை
சம்மதிக்கலாம்...ஏனென்றால் கடைசி காலத்தில் எப்படியும் பதவியில் இருக்க
வேண்டும் என்பதற்காக எந்த ரிஸ்க்கையும் எடுக்கலாம்...யாருக்குத் தெரியும்...
ஆனால் ஒன்று, அம்மையார் ஆட்சிக்கு வந்தால், ஸ்டாலினைத் தவிர அணைத்து இரத்த
சொந்தங்களும், பேரன் பேத்திகளுக்கும் வேப்பிலை அடித்து பேய்
விரட்டப்படுவார்கள்...அதை பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்குமான்னு
தெரியல...தேர்தல் வரட்டும் பார்க்கலாம்...
--
Jse.இரமேஷ்
தமிழ் நண்பர்கள்
2010/9/16 jse ramesh > பெரிய
2010/9/16 jse ramesh
> பெரிய விசயம்தான்...ஆனா தாத்தாவோட கிரிமினல் மைண்ட் சாரி சாணக்கிய மைண்ட் என்ன
> கணக்கு போட்டு வச்சிருக்குன்னு யாருக்கும் தெரியாது. எனக்குத் தெரிந்தவரை,
> தி.மு.க கடந்த முறையைவிட அதிகளவு இலவசங்களை அறிவிக்கலாம்....அந்த மகுடிக்கு
> இங்கே படமெடுத்து ஆடுபவர்கள் அதிகம்...கூட்டணி ஆட்சிக்கு ஒருவேளை
> சம்மதிக்கலாம்.
கண்டிப்பா, ஏன்னா இப்போதே தமிழகத்தில் காங்கிரஸ் தனித்த ஆட்சிக்கனவில் உள்ளது.
அவங்க கனவை தர்க்கணும்னா கூட்டணி வச்சே குழிபறிக்கணும். கூட்டணி இல்லேன்னா
திமுக வின் வண்டவாளம் எல்லாத்தையும் வெளியே வரவச்சுடுவாங்க இத்தாலி அம்மையார்.
அப்புறம் ஆயுசுக்கும் கஷ்டகாலம் தான்.
> ஆனால் ஒன்று, அம்மையார் ஆட்சிக்கு வந்தால், ஸ்டாலினைத் தவிர அணைத்து இரத்த
> சொந்தங்களும், பேரன் பேத்திகளுக்கும் வேப்பிலை அடித்து பேய்
> விரட்டப்படுவார்கள்...அதை பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்குமான்னு
> தெரியல...
ஹாஹா. மறுபடியும் "ஐய்யோ கொல்றாங்கப்பா" ன்னு கத்துறது சன்/கலைஞர் டீவியில்
வரும். ஆனா பாவம் வயசான காலத்துல 
அவங்க கட்டப்பஞ்சாயத்தை ஒழிச்சாலே போதும்.
> தேர்தல் வரட்டும் பார்க்கலாம்...
அழகிரி, ஷ்டாலின், கனிமொழி மூணு பேருக்கும் பதில் சொல்ல வேண்டிய தர்மசங்கடம்
கருணாநிதிக்கு. 
--
வினோத் கன்னியாகுமரி
தமிழ் நண்பர்கள்
தமிழ் நண்பர்களில்
தமிழ் நண்பர்களில் சாம்சன்ராஜ்:
If DMK wins, him family will become No.1 in Asia's rich family. Voters will wait for current and other small scale buisiness people like me will have to shift our family to other state for living. Government staffs will go to their offices by their own car reset of the people who are in private concerns will commit suicide because we can not buy a costly item like sugar, coffee and tea and other amenities. This government will ask us see their bridges and IT companies for their achievements.
--
சாம்சன்ராஜ்
தமிழ் நண்பர்கள்
தமிழ் நண்பர்களில்
தமிழ் நண்பர்களில் ஆர்.கே.சதீஷ்குமார்
ஆர்.கே.சதீஷ்குமார் :
மிண்ணனு இயந்திரத்தில் மாற்றங்கள் செய்ய முடியும் என இரு இளைஞர்கள் நிரூபிக்க தயாராக இருப்பதாக சென்ற இதழில் ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டது.போபர்ஸ் ஊழல்,ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவற்றில் குற்றம் உள்ளது என நன்றாக் எல்லோருக்கும் தெரிந்திரிந்திருந்தும்,குற்றவாளியை வெட்கமே இல்லாமல் யார் என்ன செய்ய முடியும் என் தப்ப விடுகிறார்க:ள் இது எம்மாத்திரம்?
--
ஆர்.கே.சதீஷ்குமார்
தமிழ் நண்பர்கள்
தமிழ் நண்பர்களில்
தமிழ் நண்பர்களில் jse.இரமேஷ்:
ஹா ஹா ஹா...அது எல்லாரோட ஆசையும்தான்...ஆனா அவ்வளவு சீக்கிரத்துல அது வெளிவராது. ஏன்னா போபர்ஸ் ஊழலில் ராஜிவ் நேரடியா சம்மந்தப் பட்டிருக்காரு. ஸ்பெக்ட்ரமில் காங்கிரஸ் தலைமை சம்மந்தப் பட்டிருக்கனும். இல்லையென்றால் மறுபடியும் ராஜாவுக்கு அதே துறை கிடைத்திருக்காது. ஒருவேளை பி.ஜே.பியோ அல்லது மூன்றாம் அணியோ ஆட்சிக்கு வந்தால்தான் இந்த ஊழல்மீது நேர்மையான விசாரணை இருக்கும். அது இப்போதைக்கு சாத்தியம் இல்லை. பின்னாளில் வேறு அணி ஆட்சிக்கு வரும்போது, குற்றவாளிகளோ அல்லது சாட்சிகளோ இறந்திருப்பர். வழக்கம்போல ஊழல் விசாரணையும் நாளைடைவில் செத்துவிடும். அதனால இந்த கண்றாவியை எல்லாம் வழக்கம்போல நாம வேடிக்கைப் பார்த்துவிட்டு, கூகிள் குழுமத்தில் கண்டபடி திட்டிவிட்டு போயிக்கிட்டே இருக்கணும். உணர்ச்சிவசப் பட்டு நம்ம உடம்பைக் கெடுத்துக்கக் கூடாது.
2010/9/17 ஆர்.கே.சதீஷ்குமார்
மிண்ணனு இயந்திரத்தில் மாற்றங்கள் செய்ய முடியும் என இரு இளைஞர்கள் நிரூபிக்க தயாராக இருப்பதாக சென்ற இதழில் ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டது.
--
jse.இரமேஷ்
தமிழ் நண்பர்கள்
கனவுகான எல்லோருக்கு உரிமை
கனவுகான எல்லோருக்கு உரிமை உண்டு அழகிரிக்கும் அந்த உரிமை உண்டு. ஆனா எப்பவுமே கொள்ளை அடிக்க விடமாட்டாங்களே நம்ம ம(மா)க்கள்.




