கருத்துகள்
ஒருவன் தவறான பழக்கத்திற்கு
ஒருவன் தவறான பழக்கத்திற்கு செல்கிறான் என்றால் அதற்கு அவன் தான் காரணமாக இருக்க முடியும்.நல்ல அறிவுரைகள், நல்ல வழிகாட்டல் இருந்தாலும் அவன் மனம் அதை ஏற்றுக்கொண்டு அவனாகவே திருந்தினானொழிய யாராலும் தவறான பழக்கத்திலிருந்து அவனை மாற்றவே முடியாது.
என்னப்பா இப்படிக்
என்னப்பா இப்படிக் கேட்டிட்டாய்?
எந்தப் பிள்ளையும் மண்ணில் பிறக்கையில்
நல்ல பிள்ளை தான்
அந்தப் பிள்ளை
நல்லவராவதும் கெட்டவராவதும்
அன்னை வளர்ப்பிலே...
அன்னை வளர்ப்பின் பின்னே
மக்களாய(சமூக)ம்(Society) தான்...
பகுத்தறிவு என்பது
கெட்டதைப் பொருட்படுத்தாமல்
நல்லதைக் கருத்திற் கொள்வதே
என்றறியா மனிதரிலும் தவறு...
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
நல்ல கேள்வி. ஒரு மாணவனின்
நல்ல கேள்வி. ஒரு மாணவனின் தவறான பழக்கத்திற்கு அவன் மட்டுமே காரணம் அல்ல என்பது என் கருத்து. இது ஒரு தொடர் சங்கிலி முறையானது. எப்படி எனில் பெற்றோர்களின் அணுகுமுறை, குடும்ப சூழ்நிலை, வறுமை அல்லது அதிகப்படியான செல்வம், சமூகம், அப்புறம் திரைப்படங்கள். ஆசிரியர்கள் இன்று மாணவர்களைக் கண்டிக்க முடியாத நிலை ஆகியவையே அம்மாணவனின் நிலைக்கு காரணம்.
அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்












