எட்டில் அழகு பதினெட்டில் அழகு
எந்த பெண்ணும் இருபதில் ரெட்டை அழகு
பெண்ணின் அழகே உச்ச அழகு
பூமியில உள்ளதெல்லாம் மிச்ச அழகு
ஆடை அழகு பாதி அழகு
அந்த சொல்லை மாற்றியது பெண்ணின் அழகு
பெண்ணை கொண்டு கூடியது மண்ணின் அழகு
உதட்டை மூடி சிரிப்பதழகு
உதிரிப்பூக்கள் தொடுப்பதழகு
மணநாள் குறித்ததும் தேதி தாள்களை திருப்பி பார்ப்பது ஓர் அழகு
வானொலியோடு பாடும் அழகு
பாடிக்கொண்டே சமைப்பதழகு
தாமரை இலையில் நீர் அழகு
அட தாவணி பெண் போல் யார் அழகு
பின்னல் ஜடையை பிரிப்பதழகு
தன்னை தானே ரசிப்பதழகு
நல்ல ஆணின் அழகினை ரசிக்கும் பெண்களின் ஓர பார்வைகள் ஓர் அழகு
காதல் பெண்ணின் மிரட்டல் அழகு
ஹய்யோ ஹய்யோ அலட்டல் அழகு
ஒவ்வோர் பெண்ணும் ஒர் அழகு
அந்த ஒன்றுக்குள்ளே நூறழகு



