நாட்டுப்பற்று கவிதைகள், தேசிய பாடல்கள், விடுதலை பாடல்கள், சுதந்திர பாடல்கள், Nattupattru Kavithaigal
முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள்முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம் பிணங்கள்முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்குமுன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது
சுதந்திரத்தை பற்றி ... கவிதை எழுதிக்கொண்டிருந்தேன் ... முற்றத்தில் வந்து விழுந்த்தது ... காகங்களால் கொத்தப்பட்ட ... குருவியொன்று ....!!!
எடுத்த குருவியை ... மெதுவாக வருடி ... முடிந்தளவு பாதுகாத்து ... பறக்கவிட ஆயத்தப்படுத்தினேன் ... வேண்டாமப்பா ..நிறுத்துங்க .. அதை கூட்டில் வளர்ப்போம் .. தடுத்தான் செல்ல மகன் ...!!!
வேண்டாம் மகனே ... அதன் சுதந்திரத்தை பறிக்க கூடாது .. பறக்க விட்டேன் குருவியை ..!!!
கட்டுக்கலை மொட்டின்மலர் யெட்டுத்திசை கிட்டும்வரைதொட்டுத்தரும் தென்றல் மணமே -அதுகொட்டும்மது பட்டென்மலர் பக்கம்நடை கட்டும்முறைகுற்றமென இட்டாற் தகுமோகுட்டிச்சிறை ஒட்டிக் கிட சட்டம் இது விட்டோம் இலைபட்டுத்துடி என்றோர் வாழ்வேன் -இவர்விட்டுப்பெரும் வெட்டைவெளி கட்டுக்களைந் திட்டப்படிஎட்டி நடைகொள்ளல் வருமோ
கூனல் நிமிர்ந்தது ... மனிதனானான் ... கூனிக்கொண்டே... போகிறான் .. கூலியானான்... கூக்குரல் இட்டு .. தோன்றியதினம் ... கூத்தாடிகளின் தினமல்ல ... கூட்டத்தோடு குரல் கொடுத்தால் ... கூட்டாக பயனைப்பெருவோம் நாம் ...
நாட்டில் கேட்டும் கிடைக்காமல் இருப்பது ,சுதந்திரம் பெறுவதற்கு முன்னும் இல்லை பெற்ற பின்னும் இல்லைபேசும் உரிமை இல்லைகருத்து சொல்லும் உரிமை இல்லைஒருவன் அரசியல் கொண்டு நாட்டை சிதைக்கிறான்மண்ணின் ஆசையில் நெற் பயிர்களை அழிக்கிறான்உண்மை கண்டவன் குரல் கொடுக்க முடியவில்லைகுரல் கொடுப்பவன் குற்றவாளிஒரு கலைஞன் தான் பயின்ற கலையைசெயல்படுத்தினால் அதில் அரசியல் கொண்டுஅவனை சரிப்பதும் இங்கே தான்உரிமை உண்டு என்று உரிமை கொண்டால்உனக்கு உரிமை இல்லை என்று சொல்வார்கள்விவசாயியின் பொருள் விலை மாந்தரின் கையில்
என்னை மன்னித்துக்கொள் ..! உன்னை குறைகூற எனக்கு தைரியம் இல்லை .. மனச்சாட்சி உயிரோடிருப்பதால் .. இப்போதுவரை வடிகின்ற கண்ணீர் ... உன் பிரிவை நினைத்தல்ல ....! நீ எனக்கு செய்த தியாகத்துக்காக ...!
உரிமை கேட்டோம் மறுக்கப்பட்டது ...! உடமைகள் இழந்தோம் உரிமைக்காக ...! உறவுகளை உண்மை உறவுகளுக்காக ...!
எமக்கு தேவையானது இவைதான் ..!
வேலியில்லாத வீடு வேண்டும்....! தடையில்லாமல் சுவாசிக்க மூக்கு வேண்டும் ...! பேசுவதற்கு வாய்வேண்டும் ...!
இவை எல்லாவற்ரையும் விட ....?
என் தேசத்தின் ஒரே ஒரு பிடி மண் வேண்டும் ...! மண்ணில் பயிர் வளருமா ..? தலைமுடிவளருமா ..? என்று நான் .. ஆய்வு செய்வதற்கு ...!
நாட்டு தலைவர் நாட்டின் .. அபிவிருத்திகெனக் கூறி ... வெளிநாடுகளில் கையேந்துகிறார்கள் ...
வீட்டுத்தலைவணோ .-நாளாந்த உணவுக்காக மாய்ந்து மாய்ந்து .. உழைக்கிறார்கள் -ஏன் இந்த இடைவெளி
நாட்டு உதவியை தன் வீட்டு அபிவிருத்திக்கு .. பயன்படித்தினால் -வீட்டுத்தலைவனின் துன்பம் தொடர் கதைதான் ...
இளைஞர்கள் தீப்பந்தம் போல் ... கொழுந்துவிட்டு எரிகிறார்கள்....
அவர்கள் எரிந்துகொண்டிருப்பது .. அரசியல் வாதிகள் என்ற பெரும் இருட்டுக்குள் ..
இருட்டு எப்போதும் வெளிச்சத்தை விழுங்கத்தான் பார்க்கும் அல்லது அணைக்கப்பார்க்கும் ...
முடியாது போனால் காற்று என்ற அரசபயங்கரவாதத்தைவிட்டேனும்...
நூர்க்கத்தான் பார்க்கும் ....?
புதிய சாதனை படைக்கும் .... பெண்களே இன்று உலகத்தில் .. தோன்றிவிட்டார்கள் .... பெண்களுக்கு கல்வி வேண்டாம்.. என்று பழங்குடிகளின் கதைகள்.. இப்போ எடுபடாது ...
பெண்களின் கல்வியே .. நாட்டின் வளர்ச்சிக்கு தேவையென்பதை .. உலக வரலாறுகள்...எடுத்துரைக்கின்றன.. பெண்மையை மதித்த நாடுகளே.. அபிவிருத்தியும் அடைந்துள்ளன பெண்மையை மதிக்காத நாடுகளே சிறுமையில் உள்ளன...
ஒரு ஆண் படித்தால் .. அவன் குடும்பத்துக்கு நலம்.. ஒரு பெண் படித்தால் .. சமுதாயத்துக்கு நலம்...