வாழ்க்கை கவிதைகள்

பூனை மனம்

G.Ramajayam's படம்
பிராணிகளில்
மிகவும் பிடித்தது
பூனை.
 
பூனை குறித்து
இகழ்ச்சி கூறின்
தீப்பந்தம் ஏந்தும் மனசு.
 

இது கனவுகளின் விடியல் !!

karthika AK's படம்

புத்தம் புது 
விடியல்கள் 
எனக்கெனப் பிறக்கின்றன! 

வெளிச்சத்தைத் தக்க 
வைக்க வழியின்றி 
இருட்டைப் பரிசளித்து 
விடைதருகிறேன் ! 

பாதிக்குப் பாதி...! (Mano Red)

Mano Red's படம்

மழையில் பாதி
குடையில் மீதி,
நனைந்து நனைந்தே
மயங்கி நின்றேன்..!!
மயக்கம் தெளிய
மழையும் கரைய
குடையை கொண்டே
தனித்து வந்தேன்..!!

வாழ்வின் விடியல்

ramanisubramanian's படம்

வாழ்வின் விடியல்
விடியலில் விழித்தேன்
விடிவெள்ளி பார்த்தேன்
நித்தம் ஒரு ஆண்டாள் அலங்காரம்
தினம் புத்தம் புது பலகாரம்
என் வீட்டு தேனீர் கோப்பைகளில்

சாவு வீடு ...!! (Mano Red)

Mano Red's படம்

அய்யய்யோ என
அழுகை சத்தம்,
அக்கம் பக்கமெல்லாம்
அதிர்ந்து கூடி
அழுகைக்கு அழுகை சேர,
அமைதியாய் பிரிந்த்திருக்கிறது
அதிர்ஷ்டம் செய்த உயிர்..!!

நீதி தேவன்

ramanisubramanian's படம்

நீதி தேவன்
நிரபராதி என்று
தெரிந்தும் கூட
சில நேரங்களில்
சோதனை பெயரில்
வேதனை நிறைந்த
தண்டனை கொடுப்பவன்

பிச்சைப் பாத்திரம்...! (Mano Red)

Mano Red's படம்

அனைத்தும் அறிந்த
ஆண்டவனைக் கேளுங்கள்,
அனாதை குழந்தைக்கு
ஆகாரம் இல்லாத போது
அவனுக்கு மட்டும்
அலங்காரம் அவசியமா...??

குடிமகன்!

kanageesh's படம்

குடிச்சு குடிச்சேதான் என் குடலும் வேகுது......
கூறுகெட்டபோதும் மனம் குடியத்தான் நாடுது....
பொண்டாட்டி புள்ளைங்க மதிக்கிறதில்ல
ஆனாலும் என்னால குடிக்காம இருக்க முடியல...

தலையெழுத்து...!!!(Mano Red)

Mano Red's படம்

கெட்டது கெட்டபின்
கேடு கெட்டு வாழ்ந்து
என்ன பயன்...??
எவனுக்கோ பயந்து
தன்னை மறப்பது ஏன்..??

Subscribe to வாழ்க்கை கவிதைகள்