அன்பு கவிதைகள்

அன்னையின் இசையில்

குயில் பாடும் சத்தம் கேட்டேன் அது 
என் அன்னையின் துயில் பாடும் சத்தம் 
மயங்கினேன் அந்த மாலை பொழுதில்
உறங்கினேன் என் அன்னை இசை கேட்டு 

ஆற்றாமை

kanageesh's படம்

நீருக்கும் நெருப்புக்கும் இடையில் நம்
உறவு..,
எப்போது குளிரும் எப்போது தகிக்கும்
என்பதறியேன்...
நாவின் சுவை மறந்தேன்
நன்மை தீமை என்பதையும் மறந்தேன்...

அம்மாவின் இயந்திரம்

vishnuvardhan_miruthinjayan's படம்

அரைமணி நேரத்தில்

அறுசுவை விருந்து படைத்திட

அம்மாவால் மட்டுமே முடியும்!

அவள் அன்பையே இயந்திரமாக்கி

அனுதினமும் பயன்படுத்துகிறாள்

அதனால் நம் பசி பொருக்கமாட்டாள்!

இறவாத பாசம்

vishnuvardhan_miruthinjayan's படம்

இறந்த பின்னும் இறவாத பாசம்!

இதயத்துடன் பேசும் பாசம்!

உணர்விலே கலந்திட்ட பாசம்!

உயிர்மூச்சாய் உலவிடும் பாசம்!

நினைவுகளில் நிறைந்திட்ட பாசம்!

அன்பில் அவளே

உடுத்திய சேலையில் தூளி கட்டி

உறங்காது தாலாட்டு பாடி

உறங்க வைப்பாள் அன்னை!

கட்டிய தூளி

பழைய சேலையில் கட்டியதால்

தொட்டு தொட்டுப் பார்த்து கொள்வாள்!

சேவை

vishnuvardhan_miruthinjayan's படம்

என் கையாய் இருந்து

என் வாழ்க்கையை உயர்த்த

ஏணியாய் மாறிய தாய்க்கு

என் கையால் சிறிது உணவை

என் வாழ்நாள் சேவையாய் செய்ய

இறைவன் அளித்த வாய்ப்பு!

எத்தனை...

vishnuvardhan_miruthinjayan's படம்

எத்தனை வேலைகளையும்

எத்தனை முறையும்

எத்துணை சலிப்பின்றி

எத்துணையுமின்றி

எந்தனுக்காய் செய்வாள்!

எத்தனை நேரமாயினும்

தனக்காய் எதுவும்

நினைவுகள் வரம்

MohanRajp's படம்

நினைவுகள் துரத்தும் ஒற்றை நொடியில் 
உனக்காக அரை நொடி 
எனக்காக அரை நொடி 
பகிர்ந்தளித்து களிப்படைகிறேன் .
நினைவுகள் வரம் 

அழகு

vishnuvardhan_miruthinjayan's படம்

கருணை நிறைந்த கண்களும்

அன்பு நிறைந்த உள்ளமும்

நேர்மை நிறைந்த செயல்களும்

உண்மை நிறைந்த வார்த்தைகளும்

உறையும் உயிர்களெல்லாம்

அழகான உருவங்களே

மனைவி என்னும் வரதட்சனை

Mohamed Thalha's படம்

 

எனக்கோ வரதட்சனை வாங்காமல் 
திருமணம் முடிக்க ஆசை 
ஆனால், என்னால் மறுக்க முடியவில்ல 
உன் தந்தை கொடுத்த வரதட்சணை 
விலைமதிப்பற்ற உன்னை கொடுக்கையில் அன்பே...!

பொக்கிஷம்

vishnuvardhan_miruthinjayan's படம்

நித்தம் நித்தம்

கேட்கும் சத்தம்!

சந்தோஷ சங்கீதம்!

மனதுக்கு உற்சாகம்!

மூளைக்கு  உத்வேகம்!

அம்மாவின் சந்தம் -அவள்

பாசத்தின் சொந்தம் - அது

அப்பா

vishnuvardhan_miruthinjayan's படம்

அப்பாவின் உடம்பில்

காரோட்டி விளையாடி

உறங்கச் செய்திட்ட

குட்டி வாண்டுகளை விட

தூங்குவது போலவும்

வலிக்காதது போலவும்

குழந்தைகளுக்காக

Subscribe to அன்பு கவிதைகள்