பதிந்தது Rukmani நாள் வியாழன், 17/05/2012 - 11:13am
வானத்தில் மலர்ந்த
மலர் போல
வையத்தில் வீழ்ந்த
நட்சத்திரம் போல
காலையில் உதிக்கும்
நிலவு போல
மாலையில் மிளிரும்
சூரியன் போல
முரண்பாடு ஆனது
குழந்தை மீதான
என் ஆசையும்...
காண கொடுத்த
கண்களை
கண்ணீர் சிந்த
பயன்படுத்துவதில்
பயனேதும் இல்லை.
பண்பட்டது நெஞ்சம்.....