kadhar's படம்

புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!

அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!

நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!

முழுதாய் புரிவதற்க்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!

எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!

பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாலாய்ப்போன வெளி நாடு!!

பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!

வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!

கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!

துக்கம் தொண்டையை அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு ;

உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் - இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

7.4
Your rating: None Average: 7.4 (5 votes)

கருத்துகள்

Selvakumarnew's படம்

உண்மைதான் காதர் ...


உண்மைதான் காதர் ...


>>>Selvakumar<<<


kadhar's படம்

நன்றி நண்பா


நன்றி நண்பா

chandru2110's படம்

மிகவும் யதார்த்தமாய்


மிகவும் யதார்த்தமாய் உள்ளது.பாராட்டுக்கள்.


சந்துரு


VISWAM's படம்

அருமை


அருமை

joshi2010's படம்

யதார்த்தம் ஆனால் உண்மையை


யதார்த்தம் ஆனால் உண்மையை உணர்வின் வலியோடு சொல்லிய கவிதை அருமை..............
"கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!! "

ஏக்கங்கள், உணர்வுகள் இறுதியில் விரக்தியாய்
" உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் - இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!"
மிகவும் அருமை நண்பரே


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


kadhar's படம்

அனைவருக்கும் மீக்க நன்றி


அனைவருக்கும் மீக்க நன்றி

syedali's படம்

நண்பர் காதர் அவர்களுக்கு


நண்பர் காதர் அவர்களுக்கு
நல்ல உணர்வுபூர்வமாக சொன்னீர்கள் வெளிநாட்டில் வாழும் இளைகர்களின் வாழ்வியலை

நன்றி . . .

என்று அன்புடன்
அ. செய்தாலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


syedali's படம்

நண்பர் காதர் அவர்களுக்கு


நண்பர் காதர் அவர்களுக்கு
நல்ல உணர்வுபூர்வமாக சொன்னீர்கள் வெளிநாட்டில் வாழும் இளைகர்களின் வாழ்வியலை

நன்றி . . .

என்று அன்புடன்
அ. செய்தாலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


vinoth's படம்

வலி வலி ஏதோ பண்ணுது இதே


7

வலி வலி ஏதோ பண்ணுது

இதே வலிதான் வெளிநாட்டில் வெற்றுப் பேப்பருக்காக பாடுபடும் கணவரிடமும் இருக்கும்

Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Ragavan's படம்

"எடுத்து சென்றாய் என்


"எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!

பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாலாய்ப்போன வெளி நாடு!!"

மிக மிக அருமையான பதிவு நண்பரே...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kadhar's படம்

anaivarukkum mikka nanri


anaivarukkum mikka nanri

kan3278's படம்

மிக அருமையான பதிவு


8

மிக அருமையான பதிவு Clap Clap Clap Clap

smariappan's படம்

சூப்பரா இருக்கு.....


5

சூப்பரா இருக்கு..... Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap


mari


kajamohideen's படம்

எல்லார் பொழப்பும்


9

எல்லார் பொழப்பும் அப்படித்தான் இருக்கு
Clap Clap Clap Clap Clap


----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை

web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com

..