சிறந்த படைப்புகள் அளிக்க
நெடுநாள் ஆசை தான்
அறிந்த படைப்புகள் அனைத்தும்
சிறப்பாகவே இருக்க
சிந்திக்கலானேன் ஆழ்ந்து
படைப்புகள் சிறந்ததா
படைத்தவர்கள் சிறந்தவர்களா
பின்னது உண்மையாயிருக்க
முன்னது உயிரோடிருக்க
உயிரோடிருக்கும் படைப்பாகிய - நான்
உலகொனின் உன்னத படைப்பு
படைப்பாளிக்கு ஆயுளுண்டு
படைப்புகளுக்கு ஆன்மாவுண்டு - இனியென்ன
பற்றியெரிந்தது தனிமையின் தவிப்பு வெளிறிக் கிடக்கிறது வெள்ளை மனம் கனத்த மௌனத்துடன் நிலைநிறுத்திப் போகிற நினைவுகள் பூர்த்திசெய்கிற புலம்பல்களும் சுற்றத்தில் மனிதரும் இல்லை.. உறக்கம் தொலைத்த விழிகள் வெகு தந்திரமாகத் திணிக்கிறது எதையோ நினைத்து அதன் வலிகளில் வாழ்வின் வழியை சுருக்கி பிளவுபட்ட மர கீறலை போல் ஆனாலும் எங்கேனும் தோன்றலாம் வன்முறையிலும் வெளிச்சமாகும் ஒரு இரவு
பேருந்தில்
அதிகபடியான நெரிசல்...
மனிதர்கள்
ஒருவர்மேல் ஒருவர்
ஒட்டிஉரசிப் பயணம்...
சில சகிக்கமுடியாத
நாற்றங்களுக்கிடையில்
எங்கிருந்தோ வீசியது!
''கசங்கிப்போன மல்லிகைப்பூ வாசணை''.
=========(நிலாசூரியன்).
முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள்முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம் பிணங்கள்முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்குமுன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது
சென்னையில கத்திரி வெயில்யாழ்பாணத்தில சித்திரை வெயில்இத்தரையிலநம்மவர் படும் பாட்டைஎப்படிப் பாடுவேன்!சோளகம் சுழட்டியடிக்கமரங்கள் இலைகளைச் சொரியஎன்னைப் போன்றோரின்வழுக்கைத் தலை வெடிக்கபகலவன் வெயிலைக் கொட்டநம்மவர் படும் பாட்டைஎப்படிப் பாடுவேன்!இலை சொரிந்த மரங்கள்துயரத்தில் இருக்கவழுக்கைத் தலைகள்நிழல் தேடி அலையபொண்ணுகள் உடுப்பு வியர்த்து நனையாமல்வீட்டுக் கோடியில் காத்து வாங்ககிணற்றுக் கட்டிலதாளை விரித்துஎழுதுகோலை பிடிக்கும் என்னைசோளகம் சுழட்டியடித்தால்
சுமையென நகரும் வாழ்க்கையில்
காலணிகூட சுமைதானே !
என்ன தேடி வந்தேன்
நினைவில்லை
என்ன தொலைத்திருக்கிறேன்
என்பதில் பொய்யுமில்லை !
ஊர் கூடி கலந்து பேசி
ஒதுக்கி வைத்தது போல
ரியாலும் திரகமும்
ஆசை வார்த்தை கூறி
அழைத்து வந்தது !
கால் தடம் பதியாமலே
புற்கள் இல்லா தரையின் மேல்
ஆசை துறந்த
புத்தர்கள் பல இங்கே !
நான் !
மடத்தில் இணைந்து
ஆண்டுகள் ஐந்தும் நிறைவு செய்துவிட்டேன் !
நடை பழகி தந்த தந்தையின்
கை பிடித்து நடந்த நினைவு